ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்களின் வீடுகளில் அதிரடி சோதனை… கட்டு கட்டாக ரொக்கமும், செல்போன்களும் பறிமுதல் ; சென்னையில் பரபரப்பு…!!

Author: Babu Lakshmanan
15 November 2022, 7:27 pm

சென்னை : சென்னையில் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் ரொக்கம் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் நடந்த கார் குண்டுவெடிப்பை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் மற்றும் போலீசார் அதிரடி சோதனைகளை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், சென்னை, நெல்லை, திருப்பூர், திருச்சி என பல்வேறு இடங்களில் ஐஎஸ்ஐஎஸ் இயக்க ஆதரவாளர்களாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, சென்னையில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்திற்கு ஆதரவாக செயல்படுவதாக 4 பேரின் வீடுகளில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர்.

சென்னை கொடுங்கையூர், மண்ணடி உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின் முடிவில் 15 லட்சம் ரூபாய் ரொக்கம், 150 செல்போன்கள் மற்றும் பிற டிஜிட்டல் கேஜெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Sarathkumar and Devayani in 3BHK after 30 years 30 ஆண்டுகளுக்கு பிறகு தேவயானியுடன் சரத்குமார்…வைரலாகும் படத்தின் டீசர்..!