சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஏகப்பட்ட ‘ட்விஸ்ட்’ : ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் அந்த ரெண்டு விஷயங்கள்!!
Author: Udayachandran RadhaKrishnan16 November 2022, 1:39 pm
ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் போட்டி மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது இந்த நிலையில் 2023 ஐபிஎல் போட்டிக்கான ஏலம் வருகின்ற டிசம்பர் மாதம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல் ஒவ்வொரு அணியும் தங்களுடைய அணியிலிருந்து நீக்கிய வீரர்களையும் அணியில் தக்க வைத்துக் கொண்டுள்ள வீரர்களையும் விரைவில் அறிவிக்க வேண்டும் என கூறியிருந்தார்கள்.
இந்த நிலையில் ஐபிஎல் போட்டிகளில் அதிக போட்டிகளில் வென்ற அணியாக சிஎஸ்கே அணி திகழ்ந்து வருகிறது அது மட்டும் இல்லாமல் அதிக முறை பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணியாகவும் சென்னை அணி இருக்கிறது.
இந்த நிலையில் ஐபிஎல் தொடங்கிய காலத்தில் இருந்து இன்று வரை மகேந்திர சிங் தோனி தான் கேப்டனாக இருந்து டீமை சிறப்பாக வழிநடத்தி செல்கிறார்.
சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2020ல் கொரோனா காரணமாக இந்தியாவிற்கு பதிலாக ஐக்கிய அரபு நாடுகளில் போட்டிகள் நடைபெற்றது அதனால் குடும்ப பிரச்சனை காரணமாக சுரேஷ் ரெய்னா அந்த தொடரில் இருந்து விலகி இருந்தார்.
பின்பு ஐபிஎல் 2021ல் எதிர்பார்த்த அளவிற்கு சுரேஷ் ரெய்னாவால் விளையாட முடியவில்லை அதனால் பிளே ஆப் சுற்றில் இருந்து சுரேஷ் ரெய்னா வெளியேறினார்.
அதன் பின்னர் சென்னையில் விளையாட வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை இந்த நிலையில் ஐபிஎல் 2022 போட்டிக்கான இடத்தில் இடம் பெற்ற சுரேஷ் ரெய்னாவை எந்த அணியும் எடுத்துக்கொள்ளவில்லை இதனால் ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகி இருந்தார்.
அப்படி இருக்கும் நிலையில் இப்பொழுது நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணியில் சுரேஷ் ரெய்னாவை பார்த்து விட முடியாதா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் ரவீந்திர ஜடேஜா சமீபத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார் சென்னை அணி எப்போதும் என்றென்றும் என பதிவு செய்திருந்தார். அந்த பதிவு இணையதளத்தில் படுமேகமாக வைரலாகி வந்தது.
அதேபோல் சுரேஷ் ரெய்னாவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்பது குடும்பம் போல என பதிவு செய்துள்ளார் அனுபவம் அதிகம் இருக்கும் சுரேஷ் ரெய்னா சென்னை அணியில் விளையாட விட்டாலும் பயிற்சியாளராக நியமனம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுரேஷ் ரெய்னா கடந்த ஆண்டு 2020 சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு அறிவித்துள்ளார் அதன்பின் ஐபிஎல் தொடரில் 2022 செப்டம்பர் 6ஆம் தேதி ஓய்வு பெற்றதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.