தமன்னாவிற்கு விரைவில் டும் டும் டும்..! மாப்பிள்ளை அவர் இல்லையாம்? விரைவில் தேதி அறிவிப்பு..!
Author: Vignesh16 November 2022, 8:30 pm
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் தமன்னாவிற்கு திருமணம் என்று கூறி அடிக்கடி வதந்திகள் சமூக வலைத்தளத்தில் பரவும். அதெல்லாம் பொய் என்று கூறி தமன்னாவும் விளக்கம் அளிப்பார்.
முன்னதாக பட நிகழ்ச்சியில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் “தமன்னா அமெரிக்காவில் உள்ள மருத்துவர் ஒருவரை காதலிப்பதாக கூறியிருந்தார்.
இந்நிலையில், தற்போது மீண்டும் தமன்னா கூறித்து அப்படியொரு தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது வதந்தி அல்ல உண்மை என்று தெரிவிக்கின்றனர். ஆம், நடிகை தமன்னா தனது வீட்டில் பார்க்கும் மாப்பிளையை தான் திருமணம் செய்துகொள்வேன் என்று முன்பிருந்தே கூறி கொண்டு தான் இருக்கிறார்.
இந்நிலையில், தமன்னாவிற்கு ஏற்றபடியான முன்பையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை தமன்னாவுடைய பெற்றோர்கள் தேர்ந்தெடுத்துள்ளார்களாம்.
அவருடன் தான் தமன்னாவிற்கு விரைவில் திருமணம் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதே போல் வதந்திகளுக்கு உடனடியாக விளக்கம் அளிக்கும் தமன்னா தற்போது எந்த ஒரு விளக்கமும் அளிக்கவில்லை.
இதனால், இந்த திருமண செய்தி உண்மை தான் என்று கூறப்படுகிறது. விரைவில் தம்மனாவே தன்னுடைய திருமணத்தை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.