பட்டதாரி இளைஞர்களை குறிவைத்து மோசடி… வேலை வாங்கித் தருவதாக ரூ.80 லட்சத்தை சுருட்டிய நபர்.. காவல் ஆணையரிடம் குவிந்த புகார்கள்!!

Author: Babu Lakshmanan
16 November 2022, 7:43 pm

திருச்சியில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பட்டதாரி இளைஞர்களிடம் ரூ.80 லட்சம் மோசடி செய்த நபர் மீது திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் இளைஞர்கள் புகார் அளித்துள்ளனர்.

திருச்ச சங்கிலியாண்டபுரம் மணல்வாரிதுறை அரசு குடியிருப்பில் வசித்து வருபவர் வேல்முருகன் (24). இவர் இதே பகுதியை சேர்ந்த நண்பர்களுடன் முதலியார் சத்திரம் பகுதியில் உள்ள பெல்ஸி கிரௌவுண்டில் கிரிக்கெட் விளையாட செல்வது வழக்கம்.

அப்போது, விளையாட்டு மைதானத்தில் மோகனூர் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்ற பார்த்திபன் இளைஞர்களிடம் மத்திய அரசு செயல்படுத்தி வரும் இ.சேவை ஆதார் மையத்தில் பணியாற்றி வருகிறேன். எனவே, மத்திய அரசு மற்றும் மாநில அரசு அதிகாரிகள் தனக்கு மிகவும் நெருக்கமானவர்கள். பட்டதாரியான உங்களுக்கு தமிழகத்தில் உள்ள அரசு பணிகளில் வேலை வாய்ப்பு வாங்கி தருகிறேன் என தெரிவித்து, அவரிடமிருந்து சுமார் 80 லட்சம் ரூபாய் வரை பணத்தை பெற்றுள்ளா.

கடந்த மூன்று வருடமாக பணத்தைப் பெற்றுக் கொண்டு எந்தவிதமான அரசு வேலையும் வாங்கி தராமல் மோசடி செய்ததாக தெரிகிறது. இதனால், இன்று பாதிக்கப்பட்ட பட்டதாரி இளைஞர்கள் 20க்கும் மேற்பட்டோர் திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த நபர் குறித்து புகார் அளித்துள்ளனர்.

அதில், பணத்தை மோசடி செய்துவிட்டு தலைமறைவான கார்த்திக் என்ற பார்த்திபனை காவல்துறையினர் கைது செய்து உரிய நடவடிக்கை எடுத்து இழந்த பணத்தை பெற்று தர வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

  • expecting good bad ugly movie collection will overtake jailer movie collection ஜெயிலரை ஓவர் டேக் செய்யப்போகும் குட்  பேட் அக்லி! விரைவில் ஒரு தரமான சம்பவம்?