நடிகை சன்னி லியோன் மீதான மோசடி வழக்கு ; கேரள உயர்நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு உத்தரவு… ரசிகர்கள் நிம்மதி..!!

Author: Babu Lakshmanan
17 November 2022, 10:20 am

கேரளா : நடிகை சன்னி லியோன் மீதான மோசடி வழக்கின் விசாரணைக்கு 2 வாரங்களுக்கு தடை விதித்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கேரள மாநிலம் கோழிக்கோட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்க ஒரு நிறுவனத்துடன் பாலிவுட் நடிகை சன்னி லியோன் ஒப்பந்தம் செய்திருந்தார். ஆனால், அந்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளின்படி, அந்த நிகழ்ச்சியில் சன்னி லியோனால் பங்கேற்க முடியவில்லை.

எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த ஷியாஸ் குஞ்சுமுகமது என்பவர் அளித்த புகாரின் பேரில், மாநில குற்றப்பிரிவு போலீசார் சன்னி லியோன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தனக்கு எதிராக தாக்கல் செய்த எஃப்ஐஆரை ரத்து செய்யக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் நடிகை சன்னி லியோன் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி ஜியாத் ரஹ்மான், சன்னி லியோன் மீதான மோசடி வழக்கின் விசாரணைக்கு 2 வாரங்களுக்கு தடை விதித்தார். அதோடு குற்றப்பிரிவு அதிகாரிகளிடம் நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்