அனிகா, பேபி சாராவுக்கு டஃப் தான்… களத்தில் குதிக்கும் பிரபல நடிகையின் வாரிசு : பளிச் பேட்டி கொடுத்த ரோஜா!!

Author: Udayachandran RadhaKrishnan
17 November 2022, 5:06 pm

மகனும், மகளும் நடிப்பு தொழிலுக்கு வந்தால் மகிழ்ச்சி அடைவேன் என ஆந்திர சுற்றுலா துறை அமைச்சர், முன்னாள் நடிகை ரோஜா தெரிவித்துள்ளார்.

ஆந்திர சுற்றுலாத்துறை அமைச்சரும் முன்னாள் நடிகையும் ஆன ரோஜாவுக்கு இன்று 49 வது பிறந்தநாள். தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை திருப்பதி கோவிலில் அவர் ஏழுமலையானை வழிபட்டார்.

அவருக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள், வேத ஆசி ஆகியவை வழங்கப்பட்டன. தொடர்ந்து கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களுடன் பேசிய அவர் ஏழுமலையானை எத்தனை முறை வழிபட்டாலும் ஆசை தீராது.

மீண்டும் மீண்டும் வழிபட வேண்டும் என்ற எண்ணமே பிறக்கும்.
இறைவனின் திவ்ய மங்கள சொரூபத்தை காணும் போது கண்களில் கண்ணீர் வழிகிறது.

எங்களுடைய தெய்வம் இருக்கும் இதே ஊரில் பிறந்து, இதே ஊரில் படித்து, இதே ஊரில் வளர்ந்தது நான் செய்த அதிர்ஷ்டம்.

ஜெகன்மோகன் ரெட்டியின் ஆசிர்வாதம் காரணமாக இன்று அமைச்சராக இருக்கிறேன். அவர் மீண்டும்,மீண்டும் மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக் கொண்டேன்.

என்னுடைய மகன், மகள் ஆகியோர் நடிப்பு தொழிலுக்கு வந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். என்னுடைய மகள் நன்றாக படித்து விஞ்ஞானி ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

என்னுடைய மகளுக்கு சினிமா துறைக்கு வரும் ஆசை கிடையாது. ஒருவேளை அவர் திரைத்துறைக்கு வந்தால் தாயாக, கதாநாயகியாக அவருக்கு நான் துணையாக இருப்பேன் என்று அப்போது கூறினார்.

இந்த நிலையில் பிறந்த நாளை முன்னிட்டு சாமி கும்பிடுவதற்காக வந்திருந்த ரோஜாவுக்கு தேவஸ்தான அதிகாரிகள், கோவில் ஊழியர்கள், ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!