பட்டாசு வெடித்ததால் ஏற்பட்ட தகராறு ; திமுக – பாஜகவினர் இடையே மோதல்… நாகையில் பதற்றம்… போலீசார் குவிப்பு..!!

Author: Babu Lakshmanan
18 November 2022, 10:56 am

நாகை அருகே திமுக , பாஜக இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், பதற்றம் ஏற்பட்டுள்ளதால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை டாடா நகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜேயந்திரன். திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்தவர். இவர் கடந்த மாதம் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இந்த நிலையில் விஜேயந்திரனுக்கு பாஜக மாவட்ட செயலாளராக பதவி வழங்கப்பட்டுள்ளது.

அதை கொண்டாடும் விதமாக அந்தப் பகுதியில் விஜயேந்திரன் ஆதரவாளர்கள் மற்றும் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடி உள்ளனர். அப்போது, அருகில் இருந்த திமுக நகர்மன்ற உறுப்பினர் ஞானமணி மளிகை கடையில் பட்டாசு விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் நகர்மன்ற உறுப்பினர் ஞானமணிக்கு காதில் காயம் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் பாஜகவைச் சேர்ந்த 5 பேருக்கும், திமுகவைச் சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர் உள்பட 2 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் நாகை அரசு மருத்துவகல்லூரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பின்னர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் உத்தரவின் பேரில், துணை காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் அக்கரைப்பேட்டை, டாடா நகர், மருத்துவமனை வளாகத்தில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் பரப்பரப்பு ஏற்பட்டது.

மேலும், மருத்துவமனையில் திமுக மற்றும் பாஜகவினர் குவிந்ததால் முழுவதும் பதட்டமான சூழல் நிலவியது.

  • Nayanthara unauthorized song usage மீண்டும் சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா..கேரளாவில் வெடித்த பூகம்பம்..!
  • Views: - 447

    0

    0