ஆட்டோவும், பேருந்தும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ; ஆட்டோ ஓட்டுநர் உடல் நசுங்கி பலி ; அதிர்ச்சி சிசிடிவி..!!

Author: Babu Lakshmanan
18 November 2022, 11:13 am

வேடசந்தூர் அருகே ஆட்டோவும் நூற்பாலை பேருந்தும் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே ஆட்டோ ஓட்டுனர் பரிதாப பலியான சிசிடிவி காட்சி தற்போது வெளியானது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்த பூத்தாம்பட்டி அருகே உள்ள பெட்ரோல் பங்க் முன்பாக, எரியோட்டில் இருந்து வேடசந்தூருக்கு வாடகைக்கு எரியோடு பாண்டியன் நகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் நாகராஜ் ஆட்டோவை ஓட்டி வந்தார்.

வேடசந்தூர் வந்து விட்டு மீண்டும் எரியோடு நோக்கி செல்லும் பொழுது எதிரே வேடசந்தூர் நோக்கி நூற்பாலைக்கு ஆட்களை ஏற்றி வந்த பேருந்து மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுனர் நாகராஜ் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடன் ஆட்டோவில் வந்த அவரது நண்பர் சந்தோஷ்(23) பலத்த காயம் அடைந்தார்.

பேருந்து ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்த வேடசந்தூர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உடலை கைப்பற்றி வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலத்த காயம் அடைந்த சந்தோஷ் ஆபத்தான நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

ஆட்டோவும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 721

    0

    0