‘HOTTEST MUMMY’ நயன்… என்னோட புத்திசாலி மருமகன்கள் என நயன்தாரா மகன்களை புகழ்ந்த பிரபலம்!!

Author: Udayachandran RadhaKrishnan
18 November 2022, 1:11 pm

தென்னிந்திய நடிகைகளில் தங்களது தொழில் வாழக்கையில் இரண்டாவது ரவுண்டில் வெற்றி பெற்று ஜொலித்தவர்கள் வெகு சிலரே. அந்த பட்டியலில் முக்கியமானவர் நடிகை நயன்தாரா. 37 வயதானாலும் கூட இன்னும் இளமை தோற்றமுடன் ரசிகர்களை வசீகரித்து வரும் இவர் சில மாதங்களுக்கு முன் தான் தனது நீண்ட நாள் காதலரான விக்னேஷ் சிவனை கரம் பிடித்தார்.

பிரபல நடிகர்களுடன் காதல் முறிவுகள், திருப்பதி கோயிலில் செருப்பு காலுடன் சென்றது, வாடகைத்தாய் சர்ச்சை என ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கினாலும், தனது விடாமுயற்சியால் தொடர்ந்து சினிமா இண்டஸ்ட்ரியில் நம்பர் ஒன் இடத்தில் கெத்தாக அமர்ந்து வருகிறார் நயன்தாரா.

நயன்தாரா இன்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். எத்தனை வருடங்கள் பிறந்தநாள் கொண்டாடினாலும், இந்த வருடம் அவருக்கு சிறப்பான பிறந்தநாள் என்றே சொல்ல வேண்டும்.

காரணம் விக்னேஷ் சிவனை கரம்பிடித்துள்ளார், வாடகைத்தாய் மூலம் இரட்டை மகன்களை பெற்றுள்ளார். அதனால் இது அவருக்கு ஸ்பெஷலான பர்த்டே.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்துகள் குவிகிறது. பர்த்டே ஸ்பெஷவலாக வாழ்த்து சொல்லிய பிரபல தொகுப்பாளர் டிடி, ஹாட்டஸ்ட் மம்மிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், உங்கள் மகன்களை பார்த்தது மகிழ்ச்சியான தருணம் எனக்கு, உங்களை கடவுள் ஆசீர்வாதிக்கட்டும், என் புத்திசாலி மருமகன்களுக்கு என் அன்பு எப்போதும் உண்டு… என பதிவிட்டுள்ளார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 478

    0

    0