அரசுப் பள்ளியில் சாதி பாகுபாடு? ஒரு மாணவனை மட்டும் வகுப்புக்குள் அனுமதிக்காத தலைமை ஆசிரியர் : ஆட்சியரிடம் பரபரப்பு புகார்!!
Author: Udayachandran RadhaKrishnan21 November 2022, 4:52 pm
பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்ப்பட்ட தகராறு காரணமாக ஒரு மாணவனை மட்டும் பள்ளியில் அனுமதிக்காத தலைமை ஆசிரியரை கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் மாணவன் பெற்றோருடன் புகார் அளித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் எரியோடு அரசு பள்ளிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது
இதைத்தொடர்ந்து தகராறில் ஈடுபட்ட பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டம் நடத்தப்பட்டு தகராறு ஈடுபட்ட மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு சென்றதாகவும், எரியோடு காவல் நிலையத்திற்கு எதிரே வசித்து வரும் ராதாகிருஷ்ணன் மகன் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் இளையராஜா என்பவரை மட்டும் பள்ளியில் அனுமதிக்காமல் அலைக்கழிப்பு செய்ததாக கூறப்படுகிறது
இதைத் தொடர்ந்து அந்த மாணவன் தனது தந்தையுடன் பள்ளிக்கு சென்ற போது தலைமை ஆசிரியர் தங்கவேல் என்பவர் அவரது தந்தையை தகாத வார்த்தையில் பேசி பள்ளியை விட்டு வெளியேற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
மாணவிகள் உள்பட 42 பேர் படிக்கும் ஒரு அறையில் ஏற்பட்ட பிரச்சனையில் இந்த மாணவனை மட்டும் தண்டிப்பதாகவும் தாழ்த்தப்பட்ட சமூகம் என்பதால் தலைமை ஆசிரியர் பள்ளியில் அனைத்து நிகழ்ச்சிகளிலிருந்தும் வெளியேற்றுவதாக கூறி
பாதிக்கப்பட்ட மாணவன் தனது தந்தையருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் செய்துள்ளார்.