ஐ லவ் யூ ரஸ்னா… 90களில் மறக்க முடியாத குளிர்பானமான ‘ரஸ்னா’ நிறுவனர் காலமானார்!!

Author: Udayachandran RadhaKrishnan
21 November 2022, 8:43 pm

குஜராத்தின் ஆமதாபாத் நகரில் வசித்து வந்த பிரபல ரஸ்னா குளிர்பானத்தின் நிறுவனர் ஆரீஜ் பிரோஜ்ஷா காம்பாட்டா. நீண்டகாலம் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த அவர் அதற்காக சிகிச்சையில் இருந்து உள்ளார்.

இந்நிலையில், அவர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 85. பிரோஜ்ஷாவுக்கு பெர்சிஸ் என்ற மனைவியும் பிருஜ், டெல்னா மற்றும் ருஜான் என்ற குழந்தைகளும் உள்ளனர்.
இவரது ரஸ்னா குளிர்பானம் 60 நாடுகளில் கிளை பரப்பி உள்ளது. அதிக விலைக்கு விற்பனையான குளிர்பானங்களுக்கு மாற்றாக மிக குறைந்த விலையில் 1970-ம் ஆண்டுகளில் ரஸ்னாவை அவர் அறிமுகப்படுத்தினார்.

இதன்படி, நாட்டில் 18 லட்சம் சில்லரை கடைகளில் ரஸ்னா விற்கப்பட்டது. 1980 மற்றும் 1990 ஆகிய காலகட்டங்களில் மக்களிடையே பிரபலம் அடைந்தது.

ரூ.5 மதிப்புள்ள ரஸ்னாவை வாங்கி 32 கோப்பைகளாக மாற்றி கொடுக்க முடியும். இதனால், ஒரு கிளாஸ் ரஸ்னாவுக்கு 15 பைசா கொடுக்கிறோம் என்ற அளவில் விலை இருந்தது.

அதன் சுவை மற்றும் தரத்திற்காக கடந்த ஆண்டுகளில் பல விருதுகளையும் ரஸ்னா பெற்றுள்ளது. பிரோஜ்ஷாவின் தலைமையின் கீழ் செயல்பட்டு வரும் அறக்கட்டளை நிறுவனம் சார்பில் சுகாதார நலம், கல்வி மற்றும் உதவி தொகை உள்ளிட்ட பல சமூக நல திட்ட பணிகளும் நடந்து வருகின்றன.

  • Angadi Theru actor Mahesh career அட இதெல்லாம் இவர் நடிக்க இருந்த படமா…கைக்கு வந்த வாய்ப்பை தவற விட்டு தவிக்கும் அங்காடித்தெரு ஹீரோ…!