ஏலேய் இசுக்கு..! 39 வயதில் வெறித்தனமாக ஒர்கவுட் செய்யும் விஷாலின் அண்ணி.. வைரலாகும் வீடியோ..!
Author: Vignesh22 November 2022, 10:30 am
நடிகர் விக்ரமின் சாமுராய் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை ஸ்ரியா ரெட்டி. இதன்பின் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் போன்ற மொழிப்படங்களில் நடித்து பிரபலமானார். நடிகர் விஷாலின் திமிரு படத்தில் வில்லியாக நடித்து மிரட்டி இருப்பார்.
ஏலேய் இசுக்கு என்று டயலாக் பெரியளவில் பேசப்பட்டது. இதையடுத்து விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி குழந்தையை பெற்று பார்த்து கொண்டார்.

மீண்டும் சினிமாவில் நடிக்க அண்டாவ காணோம் படம் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார். சமீபத்தில் கூட சுழல் என்ற படத்தில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றார்.
எப்போது இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரியா ரெட்டி, தோழிகளுடன் இணைந்து கிளாமர் போட்டோஷூட் பார்ட்டி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் ஸ்ரியா ஒர்க்கவுட் வீடியோவை வெளியிட்டும் வருவார். அப்படி சமீபத்தில் கடினமாக உழைத்த ஒர்க்கவுட் வீடியோவை பகிர்ந்துள்ளார்.