10 நாட்களில் இறப்பேன்.. அடுத்த 3 நாட்களில் உயிர்த்தெழுவேன் : சவக்குழியை தோண்டி கண்ணீர் அஞ்சலி போஸ்டர் வைத்த மதபோதகர்!

Author: Udayachandran RadhaKrishnan
22 November 2022, 11:07 am

பத்து நாளில் மரித்து, அடுத்த மூன்றாவது நாளில் உயிர்த்தெழுவேன் என மதபோதகர் கூறி வருவதால் குடும்பத்தின் தவித்து வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள கண்ணவரம் சமீபத்தில் கொல்லனபள்ளி கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் உள்ள சர்ச்சில் நாகபூஷணம் என்பவர் மத போதகராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் திடீரென்று நான் பத்து நாளில் இறந்து விடுவேன். பின்னர் மூன்றாவது நாள் மீண்டும் உயிர்த்தெழுவேன் என்று அவர் பேச துவங்கி விட்டார்.

அத்தோடு நில்லாமல் தனக்கு சொந்தமான நேரத்தில் சமாதி கட்டுவதற்கு தேவையான குழி ஒன்றையும் தோண்டி அதன் அருகில் அவர் இறந்து விட்டது போல் பிளக்ஸ் பேனர் பிரிண்ட் செய்து அமைத்திருக்கிறார்.

இதனால் குடும்ப உறுப்பினர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் புலம்புகின்றனர். ஆனால் மத போதகர் நாகபூஷணம் இன்னும் பத்து நாளில் இறந்து, அடுத்த மூன்றாவது நாள் நான் உயிர்த்தெழுவேன் என்று கூறுகிறார்.

இந்த நவீன யுகத்திலும் இது போன்ற மூடநம்பிக்கைகளை மக்களிடையே விதைக்க முயலும் இவர் போன்றவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்பது அந்த கிராம பொது மக்களின் வேண்டுகோளாக உள்ளது.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்