16 வயதானாலே தேர்தலில் வாக்களிக்கலாம்… இதென்னடா புது ரூல்ஸ்? பிரதமர் எடுத்த அதிரடி முடிவு!!

Author: Udayachandran RadhaKrishnan
22 November 2022, 4:25 pm

உலகின் பல நாடுகளில் தற்போது தேர்தலில் வாக்களிக்கும் வயது 18 ஆக இருந்து வருகிறது. குழந்தை பருவத்தில் இருந்து இறுதிக்கட்ட பதின்ம வயதின் போது ஒருவர் முடிவெடுக்கும் உரிமையை பெறுகிறார்.

தனது வாழ்வின் நன்மை தீமைகளை மட்டுமில்லாமல் நாட்டின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் அளவிற்கு ஒரு நாட்டின் பதின்ம வயது இளைஞர்களுக்கு உரிமை கொடுக்கப்படுகிறது.

நியூசிலாந்து நாட்டில் தேர்தலில் இளைஞர்கள் வாக்களிக்கும் வயது 1969 இல் 21 இலிருந்து 20 ஆகவும், பின்னர் 1974 இல் 18 ஆகவும் மாற்றம் செய்யப்பட்டது. ஆனால் தற்போதைய பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன், வாக்களிக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள 18 வயது என்பது பாரபட்சம் மிகுந்ததாக உள்ளது.

இதனால் வாக்களிக்கும் வயது 16 ஆக மாற்றப்பட முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார். பிரதமரின் இந்த முடிவை அமல்படுத்த 75% நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!