மருதமலை கோவிலில் முன்னாள் திமுக எம்எல்ஏ அத்துமீறல் ; திமுக-காரங்களுக்கு ஒரு நியாயம்… பொதுமக்களுக்கு ஒரு நியாயமா..? வைரலாகும் வீடியோ!!

Author: Babu Lakshmanan
23 November 2022, 10:48 am

மருதமலையில் அனுமதி அளிக்கும் நேரத்தை கடந்து முன்னாள் தி.மு.க எம்எல்ஏ சாமி தரிசனம் செய்வதற்காக காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை மருதமலையில் காட்டு யானைகள் நடமாட்டம், வன விலங்குகள் அங்கு குடிநீர் மற்றும் உணவுக்காக மருதமலை வனப் பகுதியில் சுற்றி திரிவது வழக்கம். சில தினங்களுக்கு முன்பு விவசாய நிலங்களுக்கு புகுந்து சேதத்தை ஏற்படுத்தியதாக விவசாயிகள் குற்றம் சாட்டப்பட்டி இருந்தனர். அந்த யானை கூட்டத்தை அங்கிருந்து மருதமலை வனப் பகுதியில் வனத்துறையினர் விரட்டினர்.

இந்நிலையில், இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த கள்ளக்குறிச்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அங்கயற்கன்னி வனத்துறையின் அனுமதி இல்லாமல், வனத்துறை எச்சரிக்கும் மருதமலை கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், மலை அடிவாரத்திற்கு வந்த அவரது வாகனத்தை காவலர்கள் தடுத்து நிறுத்தி கேட்டபோது, ‘தான் தி.மு.க சேர்ந்தவர் என்றும், காவலுக்கு நின்று இருந்தவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் செல்போன் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும், திமுக காரர்கள் என்றால் மட்டும் அனுப்புவீர்களா..? எங்களையும் அனுமதியுங்கள் என்று பொதுமக்களும் போலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தற்பொழுது இந்த் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • Vijay Trisha Sangeetha விஜய் வீட்டில் வெடித்த திரிஷா விவகாரம்.. சங்கீதா பாவம் : பரபரப்பை கிளப்பிய பிரபலம்!
  • Views: - 532

    0

    0