மற்ற கட்சி மாதிரி காங்கிரஸ் கிடையாது… சத்தியமூர்த்தி பவன் – கமலாலயம் சண்டைகள் வேறு வேறு ; காங்கிரஸ் நிர்வாகி புதுவிளக்கம்!

Author: Babu Lakshmanan
25 November 2022, 2:31 pm

மற்ற கட்சிகளைப் போல் காங்கிரஸ் கட்சி கிடையாது என்றும், தேர்தலில் நின்று வெற்றி பெற்றவர்கள் மட்டுமே இளைஞர் காங்கிரஸ் பதவிக்கு வர முடியும் என தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் லெனின் பிரசாத் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் லெனின் பிரசாத் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் பிரசாத் கூறியதாவது :- மற்ற கட்சிகளைப் போல் காங்கிரஸ் கட்சி கிடையாது. தேர்தலில் நின்று வெற்றி பெற்றவர்கள் மட்டுமே இளைஞர் காங்கிரஸ் பதவிக்கு பெற முடியும். நிர்வாகிகள் நன்றாக செயல்பட்டால் மட்டுமே பதவி இருக்க முடியும். இல்லையென்றால் அவர்களை பதவியில் இருந்து நீக்கிவிட்டு, புதிய நிர்வாகிகளை நியமிப்பதற்கான சுற்றுப்பயணம் தான் தற்போது நடைபெற்று வருகிறது.

மற்ற கட்சிகளை விட இளைஞர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் கட்சி தான் காங்கிரஸ். கடந்த சட்டமன்ற தேர்தலில் இளைஞர் காங்கிரஸிற்கு 14 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இளைஞர்களை அதிக அளவில் பொறுப்புகளுக்கு வர வேண்டும் என்று முதன்முதலாக கூறியது காங்கிரஸ் கட்சி மட்டுமே.

காங்கிரஸ் கட்சியை பாராளுமன்ற தேர்தலில் அதிக அளவு வெற்றி பெற செய்வதற்கு இளைஞர் காங்கிரஸ் முழு முயற்சி எடுத்து பாடுபடும். சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற அசம்பாவிதம் தொடர்பாக ஒழுங்கு நடவடிக்கை குழு மற்றும் அகில இந்திய காங்கிரஸ் தலைமை ஆகியவை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த பிரச்சனைக்கு ஒரு சமூக தீர்வு விரைவில் காணப்படும்.

சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது ஒரு குடும்ப சண்டை. அண்ணன் தம்பி சண்டை. ஆனால் பாஜகவில் நடந்தது என்பது பெண்ணை இழிவுபடுத்தும் செயல். அதற்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற பிரச்சனை தொடர்பாக அதற்கு பின்னால் எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாகவும், டெல்லி தலைமை விசாரணை செய்வதற்காக அனைவரையும் டெல்லிக்கு வருவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இளைஞர்களால் இந்த நாட்டில் தமிழகத்தின் எதிர்காலம் போதை கலாச்சாரம் பெருகி வருகிறது. தமிழக முதல்வர் இந்த விஷயத்தில் தனி கவனம் செலுத்தி போதைப்பொருள் ஒழிப்பை முன்னுரிமை அளிக்க வேண்டும், எனக் கூறினார்.

கார்த்தி சிதம்பரம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக தன்னை நியமித்தால் சிறப்பாக செயல்படுவேன் என்று கூறியிருப்பது தொடர்பாக கேட்ட கேள்விக்கு பதில் அளித்தவர் இளைஞர் காங்கிரஸ் யாரையும் முன் நிறுத்தாது அகில இந்திய தலைமை யாரை தலைவராக நியமிக்கிறதோ அவர்களுக்கு எங்களது ஆதரவு இருக்கும்

எங்களுடைய தலைவராக இருந்தவர், முன்னாள் பிரதமர் ஆகியும் கொன்ற தீவிரவாதிகளை ஆதரிக்கும் யாரையும் இளைஞர் காங்கிரஸ் எதிர்க்கிறது. திமுக காங்கிரஸ் கட்சி உறவு சுமூகமாக உள்ளது. கொள்கைகளில் நாங்கள் வேறுபட்டாலும் மதசார்பற்ற தன்மை மேலோங்க வேண்டும் என்பதற்காக, திமுகவோடு நாங்கள் கூட்டணி வைத்துள்ளோம். கூட்டணி நன்றாக உள்ளது. இலங்கை தமிழர் உள்ளிட்ட விஷயங்களை திமுகவோடு நாங்கள் முரண்படுகிறோம், எனக் கூறினார்.

  • Sivakarthikeyan transition from TV to big screen சீரியல் வாய்ப்புக்கு ஏங்கிய சிவகார்த்திகேயன்..NO சொன்ன சின்னத்திரை நடிகர்..!
  • Views: - 585

    0

    0