அப்படி ஒரு அழகில்.. ஆளை மயக்கும் பொன்னியின் செல்வன் நடிகை Sobhita Dhulipala ஸ்டில்ஸ்..!

Author: Vignesh
25 November 2022, 6:00 pm

பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து பிரபலமான நடிகை ஷோபிதா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண புகைப்படத்தை பகிர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் ஷோபிதா. அவர் இப்படத்தில் வானதி என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

sobhita dhulipala - updatenews360

கதைப்படி பொன்னியின் செல்வன் படத்தின் நாயகன் ஜெயம் ரவிக்கு ஜோடி இவர் தான். இப்படத்துக்கு பின்னர் நடிகை ஷோபிதாவிற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன.

சமீபத்தில் இவர் காதல் சர்ச்சையிலும் சிக்கினார். அதன்படி நடிகை சமந்தாவின் முன்னாள் கணவரும், பிரபல தெலுங்கு நடிகருமான நாக சைதன்யாவுடன் ஷோபிதா அடிக்கடி டேட்டிங் செய்து வருவதாகவும், இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் டோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இருவரும் இதுகுறித்து எந்தவித விளக்கமும் அளிக்காமல் மவுனம் காத்து வருகின்றனர்.

sobhita dhulipala - updatenews360

இந்நிலையில், நடிகை ஷோபிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திடீரென திருமண புகைப்படங்களைப் பகிர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதைப்பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் உண்மையில் அது அவரது திருமண புகைப்படங்கள் இல்லையாம். அது விளம்பரத்திற்காக அவர் பதிவிட்ட பதிவாம்.

sobhita dhulipala - updatenews360

இந்த புகைப்படங்களைப் பார்த்ததும் ஷோபிதாவிற்கு நிஜமாகவே திருமணம் ஆகிவிட்டது என்று எண்ணியதாக அவரது ரசிகர்கள் தங்களது கருத்துக்களை கமெண்ட்டில் பதிவிட்டு வருகின்றனர். சிலரோ நாக சைதன்யாவை எப்போது திருமணம் செய்துகொள்ளப் போகிறீர்கள் என கேட்டு அவரை கிண்டலடித்து வருந்தனர்.

இந்நிலையில் சர்ச்சைகளுக்கு மத்தியில் தன்னுடைய கவர்ச்சி புகைபடங்களை வெளியிட்டு வருகிறார்.

sobhita dhulipala - updatenews360
  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 665

    0

    0