இந்த படங்களுக்கு நடுவுல இப்படி ஒரு தொடர்பா?.. பிரபல நடிகை வெளியிட்ட புகைப்படத்தால் குஷியில் ரசிகர்கள்..!

Author: Vignesh
25 November 2022, 7:30 pm

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. காரணம் இந்திய சினிமாவிற்கே இவர் சூப்பர் ஸ்டார் என்பதால், இவர் பேச்சு,நடிப்பு,ஸ்டைல் என எல்லாவற்றையும் பிரித்து ரசித்து பார்க்கும் அளவிற்கு தனக்கான ரசிகர்கள் கூட்டத்தினை கூட்டியுள்ளார்.

Rajini - updatenews350.jpg 2

இவர் படங்கள் வெளிநாடுகளிலும் வெளியாவதால் வெளிநாடுகளிலும் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம் உண்டு. குறிப்பாக சீனாவில் சூப்பர் ஸ்டாருக்கு தமிழ் சினிமாவை போல ரசிகர்கள் உள்ளனர். அந்தளவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மக்கள் மனதில் தனது நடிப்பு மற்றும் ஸ்டைலினால் தனி இடத்தினை பிடித்துள்ளார்.

Rajini_updatenews360.jpg 2

அபூர்வ ராகங்கள் படத்தில் இருந்து இன்று அண்ணாத்த படம் வரை இவர் செய்த சாதனைகள் பல, வாங்கிய விருதுகள் பல, ரசிகர்கள் கூட்டம் பல, இதுவே சூப்பர் ஸ்டாரின் பலம். அன்று முதல் இன்று வரை இவருக்கான ரசிகர்கள் கூட்டம் கூடிக்கொண்டே தான் இருக்கிறது. என்னதான் தற்போது மிக பெரிய நடிகர்களாக இருந்தாலும் ஆரம்பத்தில் பல அடிகள், அவமானங்கள் ஆகியவைகளை பெற்றுத்தான் இன்று சினிமாவில் உயர்ந்துள்ளார்.தற்போது இவர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். சன்பிக்சர் தயாரிக்கும் இப்படத்தில் அனிருத் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார்

ramya krishnan - updatenews360.jpg 3

இப்படத்தில் படக்குழு ஒரு முக்கிய விஷயத்தினை செய்துள்ளது. இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் படையப்பா படத்தில் உபயோகித்து போல பெரிய துண்டு ஒன்றை இப்படத்திலும் பயன்படுத்தி வருகிறார்.அதனை ரம்யாகிருஷ்ணன் புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு My padayappa and now my JAILER என குறிப்பிட்டுள்ளார். இந்த துண்டுடன் ரஜினிகாந்த் திரையில் வரும்பொழுது ரசிகர்கள் சப்தத்தால் திரையரங்கு அதிரப்போவது உறுதி.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 779

    1

    1