பள்ளியின் முதல் மாடியில் இருந்து கீழே விழுந்த மாணவி படுகாயம்… மீண்டும் பரபரப்பை கிளப்பிய சம்பவம் : காரணம் என்ன?

Author: Udayachandran RadhaKrishnan
25 November 2022, 9:07 pm

அரசு பள்ளி மாணவி முதல் மாடியில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே லாலாபேட்டையில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் மகிளிப்பட்டி, மகாதனபுரம், சிந்தலவடி, பிள்ளப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமப்புறங்களில் இருந்து ஆயிரம் கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று பள்ளி வழக்கம் போல் செயல்பட்டு வந்த நிலையில் பத்தாம் வகுப்பு படிக்கும் மதஸ்ரீ என்பவர் முதல் மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார்.

இதில் தலை, கால், இடுப்பில் படுகாயம் அடைந்த மாணவியை பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உடனடியாக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக கொண்டு சென்றனர்.

மருத்துவர்கள் பரிசோதித்த பின்னர் பத்தாம் வகுப்பு மாணவியை உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கக் கூறியுள்ளார்.

மாணவி மதஸ்ரீ டே திருச்சி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் குளித்தலையில் இருந்து இருந்து அனுப்பி வைக்கப்பட்டது.

  • Rajini took the actress who was shooting in the car படப்பிடிப்பில் இருந்த நடிகையை காரில் போட்டு தூக்கிச் சென்ற ரஜினி.. பல நாள் பிறகு வெளியான உண்மை!