ஆந்திராவில் இருந்து அரசுப் பேருந்தில் கஞ்சா கடத்தல் ; தாய் – மகன் கைது.. 8 கிலோ கஞ்சா பறிமுதல்

Author: Babu Lakshmanan
26 November 2022, 8:35 am

தமிழக – ஆந்திர எல்லையில் போலீசார் வாகன சோதனையில் ஆந்திராவில் இருந்து அரசுப் பேருந்தில் கடத்தி வந்த தாய் மற்றும் மகனை போலீசார் கைது செய்தனர்.

தமிழக – ஆந்திர எல்லையான ஆரம்பாக்கம் அருகே எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த ஆந்திர அரசுப் பேருந்து ஒன்றில் சோதனையிட்டனர்.

பயணிகள் இருவர் கொண்டு வந்த பையில் பண்டல் பண்டலாக கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து, 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அதனை ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டிற்கு கடத்தி வந்த உசிலம்பட்டியை சேர்ந்த தாய் சசிகலா, மகன் பால்பாண்டி ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 435

    0

    0