தாய் வீட்டுக்கு டாட்டா காட்டிய ஆல்யா : ரீ என்ட்ரி ஆகும் புது ப்ரோமோவுக்கு செம மவுசு!!
Author: Udayachandran RadhaKrishnan26 November 2022, 12:55 pm
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஆல்யா மானசா.
இந்த சீரியலுக்கு பிறகு இவர் சஞ்சிவை காதலித்து திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தை பெற்றுக் கொண்டார். அதன் பிறகு ராஜா ராணி 2 சீரியலில் நடிக்க தொடங்கி மீண்டும் கர்ப்பமாகியதால் பிரசவத்துக்காக சீரியலில் இருந்து விலகினார்.
இரண்டாவது குழந்தை பிறந்ததற்கு பிறகு உடல் எடை கூடி குண்டாகி இருந்த ஆல்யா மீண்டும் சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்க கடுமையாக பயிற்சி செய்து வந்தார். மேலும் இவர் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள சீரியலில் என்ட்ரி கொடுக்க இருப்பதாக சொல்லப்பட்டு வந்தது.
அதற்கேற்றாற்படி தற்போது ஆலியா மானசா நடிக்க உள்ள இனியா என்ற சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த சீரியல் ஒளிபரப்பாகும் என ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.