தந்தை- மகனை துரத்தி துரத்தி அடித்த திமுக நிர்வாகி : போதையில் அத்துமீறிய காட்சிகள் வைரல்.. வேடிக்கை பார்த்த காவலர்!!

Author: Udayachandran RadhaKrishnan
26 November 2022, 1:49 pm

திமுக நிர்வாகி ஒருவர் அப்பா மகனை தாக்கிய காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 20ம் தேதி ஞாயிறன்று இரவு, திருப்பூர் சீனிவாசா திரையரங்கம் அருகே உள்ள டாஸ்மாக் கடை பகுதியில் மதுபோதையில் திமுக நிர்வாகியான அருண்மொழி நின்றிருக்கிறார்.

அப்போது அந்த வழியாக வந்த கார் இவரை உரசுவது போல சென்றதால், ஆத்திரமடைந்த அருண்மொழி காரை நிறுத்தி அதில் இருந்த அபிபுல்லா அவரது மகன் சபி ஆகிய இருவரையும் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.

சம்பவத்தின் போது மதுபோதையில் இருந்த அருண்மொழி அபிபுல்லா மற்றும் அவரது மகனை துரத்தி துரத்தி தாக்கியதை அங்கிருந்த நபர் ஒருவர் வீடியோவாக எடுத்துள்ளார்.

4 நாட்கள் கழித்து தற்போது அந்த வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மதுபோதையில் அப்பா மகனை திமுக நிர்வாகி துரத்தி அடித்த போது அருகில் டராபிக் போலீசார் ஒருவர் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த காட்சிகள் அதில் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக அபிபுல்லா புகார் அளித்தார்.
அதனடிப்படையில் அருண்மொழியை அனுப்பர்பாளையம் போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆட்சிக்கு வந்த பின் திமுக நிர்வாகிகள் தொடர்ந்து மக்களுக்கு எதிரான சம்பவங்களில் ஈடுபட்டு வருவது அதிகரித்து வருகிறது.

  • suriya act in venky atluri movie soon before vaadivaasal மீண்டும் ரொமான்டிக் ஹீரோவாக களமிறங்கும் சூர்யா? அதுவும் இந்த டைரக்டர் படத்துலயா?