பொதுக்கூட்டத்தில் ஆவேசமாக பேசிய ஆர்எஸ் பாரதி… ஆளுநர் வசம் சென்ற உளவுத்துறையின் பரபர ரிப்போர்ட் ; கொந்தளிப்பில் பாஜக!!

Author: Babu Lakshmanan
26 November 2022, 4:06 pm

அதிரடியாக பேசி சர்ச்சையில் சிக்கி கொள்ளும் திமுக நிர்வாகிகளில் முதன்மையானவர் ஆர்எஸ் பாரதி. தற்போது, நெல்லை மத்திய மாவட்ட திமுக சார்பில் பாளையங்கோட்டையில் நடந்த இந்தி திணிப்பு எதிர்ப்பு விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியது, மத்திய பாஜகவும், ஆளுநரையும் கடும் கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது.

அந்தப் பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது :- ஆளுநருக்கு சம்பளம் கொடுப்பது நாம். அவர் டீ குடிப்பது முதல் அவர் வீட்டு வேலையாட்களுக்கு சம்பளம் கொடுப்பது வரை தமிழக அரசின் வரிப்பணம் தான் கொடுக்கப்படுகிறது. ஆனால், நம்முடைய வரிப்பணத்தில் அமர்ந்திருக்கும் அவர், திராவிடத்துக்கு எதிராக பேசுகிறார். கூட்டம் நடத்துகிறார். திராவிடம் என்பதே இல்லை என சொல்கிறார். மெண்ட்டலாகத்தான் இருப்பாங்க ஐ.பி.எஸ். படித்து முடித்துவிட்டு , வேலைக்கு சேருவாங்க, அந்த வேலையை விட்டுட்டு அரசியலுக்கு வர்ற அதிகாரிகளெல்லாம் மெண்ட்டலாகத்தான் இருப்பாங்க, என்று கடுமையாக ஒருமையில் பேசியிருக்கிறார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும், அண்ணாமலையும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள் என்பதால், அவர்களை மறைமுகமாக ஆர்எஸ் பாரதி விமர்சித்ததாக பாஜகவினர் கொந்தளித்து வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல், ஆர்.எஸ். பாரதியின் முழுமையான பேச்சையும், ஆளுநர் ரவிக்கு அனுப்பி வைத்துள்ளது மத்திய உளவுத்துறை.

ஏற்கனவே, ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்று திமுக தரப்பில் குடியரசு தலைவரிடம் மனு அளித்துள்ள நிலையில், தற்போது ஆளுநர் குறித்து திமுக பிரமுகர் ஆர்எஸ் பாரதி பேசியிருப்பது இந்த விவகாரத்தை மேலும் பரபரப்பை பற்ற வைத்துள்ளது.

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் பவள நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னை வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் பாஜக நிர்வாகிகள் மீது பொய் வழக்குகள் போட்டுள்ளதாகவும், தமிழக காவல்துறை அதிகாரிகள் திமுக மாவட்ட செயலாளர்கள் போல நடந்து கொள்கிறார்கள் எனக் குறிப்பிட்டு, அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகள் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. எனவே, விரைவில் தமிழக அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 414

    0

    0