தமிழகம் முழுவதும் தொடங்கியது 2ஆம் நிலை காவலர் பணிகளுக்கான தேர்வு : கோவையில் 6 மையங்களில் தேர்வை எழுதினர்!!
Author: Udayachandran RadhaKrishnan27 November 2022, 11:41 am
இரண்டாம் நிலை காவலர் பணிக்கான தேர்வு 12, 309 பேர் எழுதுகிறார்கள்
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் மாநிலம் முழுவதும் 3552 காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில் இரண்டாம் நிலை காவலர் சிறைகாவலர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பணிகளுக்கான எழுத்து தேர்வு இன்று நடைபெறுகிறது.
கோவையில் இந்த தேர்வானதே கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரி பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரி, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி, இந்துஸ்தான் கல்லூரி, என் ஜி பி கலை அறிவியல் கல்லூரி, பிஎஸ்ஜி கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி ஆகிய ஆறு மையங்களில் நடைபெறுகிறது.
இதில் நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த 12,309 பேர் தேர்வு எழுதுகிறார்கள். தேர்வு எழுதுபவர்கள் காலை 8. 30 மணிக்குள் தேர்வு மையத்துக்குள் வரவேண்டும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல தேர்வு அறைக்குள் மின்சாதன எந்த பொருட்களும் கொண்டுவரக் கூடாது என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.