தடையை மீறி ஆர்எஸ்எஸ் ஆலோசனை கூட்டம் : பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
27 November 2022, 6:20 pm

சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதனை துணை அமைப்புகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன், ஆர்.எஸ்.எஸ் தேசிய இணை பொதுச்செயலாளர் அருண்குமார் போன்ற பலர் கலந்து கொண்டனர்.

பள்ளி வளாகங்களில் அரசியல் மற்றும் மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதனை துணை அமைப்புகள் பள்ளிகளில் கூட்டம், பேரணி நடத்த அனுமதியில்லா நிலையில் இந்த கூட்டம் நடத்தப்பட்டு இருப்பது கவனிக்கத்தக்கது.

  • cs-amudhan-shared-that-does-ilaiyaraaja-want-money-in-this-issue இளையராஜாவுக்கு காசுதான் முக்கியமா? இப்படிப்பட்ட ஒரு மனுஷன்… பிரபல இயக்குனர் காட்டம்…
  • Close menu