பாட்ஷா பாடல்… நடனமாடி மாஸ் காட்டிய தோனி… ஹர்திக் பாண்டியாவும் சேர்ந்து போட்ட ஆட்டம்.. வைரலாகும் வீடியோ..!!
Author: Babu Lakshmanan28 November 2022, 1:09 pm
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தற்போதைய இந்திய அணியின் டி20 கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுடன் இணைந்து கலக்கலாக நடனம் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த 2008ல் அறிமுகமான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. உலகளவில் டி20 தொடரில் ஐபிஎல் கிரிக்கெட் முன்னணி தொடராக விளங்கி வருகிறது.
முதலில் 8 அணிகளுடன் தொடங்கிய இந்த தொடரில், கடந்த ஆண்டு புதியதாக குஜராத் மற்றும் லக்னோ அணிகள் இணைந்தன. அதிகபட்சமாக மும்பை அணி 5 முறையும், சென்னை அணி 4 முறையையும் கோப்பையை கைப்பற்றியுள்ளன.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற தோனி, தற்போது ஐபிஎல்லில் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். எப்போது வேண்டுமானாலும் ஓய்வை அறிவித்து விடுவார் என்ற ஐயத்தில் ரசிகர்கள் இருந்து வரும் நிலையில், அடுத்த ஆண்டு நடக்கும் ஐபிஎல் தொடரில் சென்னையை அவர் வழிநடத்துவது உறுதியாகியுள்ளது.
குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் நேரத்தை செலவழித்து வரும் தோனி, துபாயில் நிகழ்ச்சியொன்றில் கலக்கல் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவைச் சேர்ந்த பிரபல பாடகர் பாட்ஷாவின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தோனியும், ஹர்திக் பாண்ட்யாவும் உற்சாகமாக நடனமாடினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.