24 மணி நேரமும் போதை… கல்யாணம் பண்ணி காலியாகறத விட ஜாலியா இருக்கலாம் : 40 வயது நடிகை ஹேப்பி!!
Author: Udayachandran RadhaKrishnan28 November 2022, 4:10 pm
கோலிவுட்டில் 20 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வரும் நடிகைகள் என்றால் அது விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இருக்கும்.
அந்த வகையில் முதல் இடத்தில் இருப்பவர் நடிகை த்ரிஷா மற்றும் நயன்தாரா இவர்களின் நடிகை நயன்தாரா சமீபத்தில் திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகி விட்ட நிலையில் நடிகை திரிஷா இன்னமும் திருமணம் செய்துக்கொள்ளாமல் இருக்கிறார்.
நடிகை திரிஷாவிற்கு 40 வயதை நெருங்கிவிட்ட நிலையில் திருமணம் செய்து கொள்ள முனைப்பு காட்டுவது அல்லது அதற்கு ஆர்வம் இல்லை என்றே தெரிகிறது காரணம் இவருடைய திருமணம் நிச்சயதார்த்தம் வரை வந்து நின்று போனதுதான் என்று கூறுகிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள்.
இந்நிலையில் நடிகைகள் மற்றும் நடிகர்கள் கொடுத்த கருப்புப் பக்கத்தை வெளுக்க வைத்து வரும் நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் நடிகை திரிஷா குறித்து வெளியிட்டுள்ள தகவல்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
நடிகை திரிஷா திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கு அவருடைய குடிப்பழக்கம் தான் காரணம் என்று கூறி இருக்கிறார் நடிகர் பயில்வான் ரங்கநாதன்.
சமீபத்தில திரைப்பிரபலங்கள் பலரும் திருமணத்தில் இணைந்து பின் விவகாரத்து அல்லது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதையும் காரணம் காட்டி திரிஷா தனது திருமணத்தை புறக்கணித்து வருகிறார்.
அதுமட்டுமில்லாமல் திரிஷாவின் குடிப்பழக்கமும் அவரது திருமணம் தள்ளிப் போகிற முக்கியமான காரணம் என்று தெரிவித்திருக்கிறார். திரிஷா குடித்துவிட்டு கலாட்டா செய்வதாக அவருடைய சுற்றத்தினர் நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்கள்.
ஒருவேளைதிருமணம் செய்து கொண்டால் இது போல சுதந்திரமாக குடிக்க முடியாது என்பதும் திரிஷாவின் திருமணத்திற்கு நோ சொல்ல அதற்கான மற்றொரு காரணம் என பயில்வான் ரங்கநாதன் கூறி இருக்கிறார்.
அதுக்கேற்றவாறு சமீபத்தில் திரிஷா தனது தோழிகளுடன் குடியும், கும்மாளமாக சுற்றி வருகிறார். இது தொடர்பான காட்சிகளும் இணையத்தில் வெளியாகி வைரலாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.