தலைநகரை தலைசுற்ற வைத்த கொலை : கணவனை 10 துண்டுகளாக வெட்டி ஃபிரிட்ஜில் வைத்த மனைவி… உடந்தையாக மகன்.. பகீர் சம்பவம்!

Author: Udayachandran RadhaKrishnan
28 November 2022, 6:01 pm

கணவனை 10 துண்டுகளாக வெட்டி கொலை செய்த மனைவி மற்றும் மகனை போலீசார் கைது செய்தனர்.

டெல்லி பாண்டவ் நகர் பகுதியை சேர்ந்தவர் பூணம். இவருக்கும் அஞ்சன் தாஸ் என்பவருக்கும் திருமணம் நடைபெற்று ஒரு மகன் உள்ளார். அஞ்சன் தாஸுக்கும் பூணத்திற்கும் இது இரண்டாவது திருமணம்.

அஞ்சன் தாஸுக்கு பீகாரை சேர்ந்த பெண்ணுக்கும் முதல் திருமணம் நடைபெற்று 8 குழந்தைகள் பிறந்து உள்ளன. அந்த மனைவி தற்போது குழந்தைகளுடன் பீகாரில் வசித்து வந்து இருக்கிறார்.

அதேபோல் பூணத்திற்கு ஏற்கனவே ஒருவருடன் திருமணமாகி தீபக் என்ற மகன் இருக்கிறார். தீபக்கிற்கும் திருமணம் ஆகிவிட்டது. இந்த நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு கேன்சர் நோய் பாதிப்பு காரணமாக கணவர் இறந்துவிட அஞ்சன் தாஸை அவர் திருமணம் செய்து உள்ளார். இருவரும் டெல்லி பாண்டவ் நகரில் வசித்து வந்து உள்ளனர்.

8 குழந்தைகளுடன் போதிய பொருளாதார வசதி இல்லாமல் சிரமப்பட்டு வந்த தனது முதல் மனைவிக்கு அவ்வப்போது செலவுக்கு பணம் அனுப்பி வைத்து வந்திருக்கிறார் அஞ்சன் தாஸ்.

இந்த நிலையில் பூணத்தின் நகைகளையும் விற்றுவிட்டு அஞ்சன் தாஸ் தனது முதல் மனைவிக்கு பணம் அனுப்பியதாக கூறப்படுகிறது. இது பூணத்திற்கு தெரியவந்து உள்ளது.

இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த பூணம், இதுகுறித்து மகன் தீபக்கிடம் தெரிவித்து உள்ளார். அஞ்சன் தாஸை கொலை செய்ய இருவரும் திட்டம் தீட்டி இருக்கின்றனர்.

கடந்த ஜூன் மாதம் தீபக்கிற்கு போதை தலைகேறும் வகையில் மதுவை இருவரும் ஊற்றிக் கொடுத்து உள்ளனர். ஒரு கட்டத்தில் அவர் சுயநினைவை இழந்து உள்ளார்.

அதன் பின்னர் தாயும் மகனும் சேர்ந்து அஞ்சன் தாஸை கொன்று இருக்கிறார்கள். அவரது உடலை பல துண்டுகளாக வெட்டிய இருவரும், வெவ்வேறு இடங்களில் உடல் பாகங்களை வீசி இருக்கிறார்கள்.

உடலின் முதல் பாகத்தை அவர்கள் வசித்த பாண்டவ் நகர் பகுதிக்கு அருகிலேயே கடந்த ஜூன் மாதம் கண்டுபிடித்த போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

ஆனால், உடல் அழுகிய நிலையில் இருந்ததால் அது யார் என்பதை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனை தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை அவர்கள் ஆய்வு செய்தபோது ஒரு பெண்ணும் அவரது மகனும் உடல் பாகம் கிடந்த இடத்துக்கு இரவு நேரங்களில் அடிக்கடி வருவதை கண்டறிந்தனர்.

இதை வைத்து நடத்தப்பட்ட விசாரணையில் கொல்லப்பட்டது அஞ்சன் தாஸ் எனவும், பூணம் தனது மகனோடு சேர்ந்த இந்த கொலையை அரங்கேற்றி இருப்பது தெரியவந்தது.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் உடலை 10 துண்டுகளாக வெட்டி ஃப்ரிட்ஜில் வைத்தது தெரியவந்தது. இதுவரை 6 பாகங்களை போலீசார் கண்டுபிடித்து உள்ளனர்.

கொல்லப்பட்ட பூணமின் 2வது கணவர் ஆஞ்சன் தாஸ், தன்னுடைய மனைவியிடம் தகாத முறையில் நடந்துகொள்ள முயன்றதால் இந்த கொலைக்கு தாயுடன் சேர்ந்து தானும் சம்மதம் தெரிவித்ததாக போலீசாரிடம் விளக்கி உள்ளார். ஆனால் அஞ்சன் தாஸை காணவில்லை என போலீசுக்கு இதுவரை எந்த புகாரும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 440

    0

    0