ரோபோ ஷங்கருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சூப்பர் ஸ்டார்..!

Author: Vignesh
29 November 2022, 10:00 am

விஜய் தொலைக்காட்சியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் ரோபோ ஷங்கர். தற்போது தமிழ் சினிமாவில் பிசியான காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவரது மனைவி பிரியங்காவும் தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர்களது மகள் இந்திரஜாவும் தளபதி விஜயின் பிகில் படத்தில் பாண்டியம்மாவாக நடித்து தற்போது பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

robo shankar - updatenews360

கலைக்குடும்பமாக வலம் வரும் ரோபோ ஷங்கருக்கு இன்று 22வது திருமண நாள். இதனை முன்னிட்டு சூப்பர் ஸ்டாரை சந்தித்து வாழ்த்து பெற அனுமதி கேட்டு இருந்த நிலையில் சூப்பர் ஸ்டாரிடம் இருந்து அழைப்பு வர குடும்பத்துடன் சென்று வாழ்த்து பெற்றனர்.

robo shankar - updatenews360

கிழக்கு கடற்கரை சாலையில் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பில் இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரோபோ ஷங்கரின் குடும்பத்திற்கு இந்த சர்ப்ரைசை அளித்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

robo shankar - updatenews360

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?