பழம்பெரும் நடிகை லட்சுமி திடீர் மரணம்..? வெளியான ஆடியோ பதிவு..!
Author: Vignesh30 November 2022, 1:37 pm
இன்றைய நடிகைகளை ஒப்பிடும் போது 70ஸ், 80ஸ் களில் நடித்த நடிகைகள் ஹீரோக்களுக்கு சமமாக கதையில் காட்டப்பட்டனர். அவர்களும் தங்களுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி சினிமா ரசிகர்களிடையே பெயர் வாங்கினார். இதில் முக்கியமானவர் நடிகை லட்சுமி. 70ஸ் களில் இளம் கதாநாயகியாக இருந்த இவர் 80ஸ் காலத்தில் முக்கியமான நிறைய கேரக்டரில் நடித்தார்.
தமிழ்த் திரைப்பட நடிகையும் தொலைக்காட்சித் தொகுப்பாளரும் ஆவார். இயக்குநர் மல்லியம் ராஜகோபாலால் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டவர்.அவரது முதல் படம் ஜீவனாம்சம் 1968ஆம் ஆண்டு வெளிவந்தது.
லட்சுமியின் தந்தை யரகுடிபாடி வரத ராவ் மற்றும் தாய் குமாரி ருக்மணி இருவருமே திரைத்துறையில் பணியாற்றியவர்கள். தந்தை வரத ராவ் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நெல்லூர் நகரைச் சேர்ந்தவர். நடிப்பதோடு சமூகப்பிரச்சினைகளை அலசும் திரைப்படங்களை தயாரிக்கவும் செய்தார். லட்சுமியின் தாய் ருக்மணியும் சிறந்த தமிழ் நடிகையாக விளங்கினார். எனவே திரைப்படங்களில் நடிப்பது அவருக்கு இயல்பாகவே அமைந்தது.
தனது பதினேழாம் வயதில் பெற்றோர் ஏற்பாடு செய்த பாஸ்கர் என்பவரை மணம் புரிந்து 1971-ம் ஆண்டு ஐஸ்வர்யா என பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இதன் பின்னர் பாஸ்கருடன் மணமுறிவு ஏற்பட்டு தனது மகளை தன்னுடன் வளர்க்கும் உரிமை பெற்றார்.
வெள்ளித்திரை உடன் நிறுத்தி கொள்ளாமல் சின்னத்திரையிலும் தோன்றியுள்ள லட்சுமி 3 டிவி சீரியல்கள், தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களும் கலந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் உயிரிழந்ததாக பரவி வரும் தகவல் உண்மை இல்லை என்றும் நல்ல ஆரோக்கியத்துடன் தான் இருப்பதாக ஆடியோ பதிவில், நடிகை லட்சுமியே தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற பொய்யான செய்திகளை பரப்பவேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போது கடையில் காய்கறி வாங்கிக்கொண்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.