2 ஓவர்களால் நியூசிலாந்து அப்செட்.. நியூசிலாந்து ஒன்னு… மழை ரெண்டு : அதிர்ஷ்டமில்லாத வில்லியம்சன்… தொடரை இழந்தது இந்தியா!!

Author: Babu Lakshmanan
30 November 2022, 4:28 pm

இந்தியா – நியூசிலாந்து அணிக்கு இடையிலான ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டதால், நியூசிலாந்து அணி தொடரை வென்றது.

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. 2வது ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் இன்று காலை தொடங்கியது.

இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு முன்னணி வீரர்கள் சொதப்பினர். கில் (13), தவான் (28), பண்ட் (10), சூர்யாகுமார் யாதவ் (6),தீபக் ஹுடா (12) என சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை இழந்தனர்.

ஒருகட்டத்தில் இந்திய அணி 121 ரன்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. மறுபுறம் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ஸ்ரேயாஷ் ஐயரும் 49 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதனால், இந்திய அணி 200 ரன்களை தொடுவதே சந்தேகமாகியது.

இந்த நிலையில், களத்தில் இறங்கிய வாஷிங்டன் சுந்தர் தனது பங்கிற்கு ரன்களை குவித்துக் கொண்டிருந்தார். இதனால், 47.3 ஓவர்களில் இந்திய அணி 219 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்த வாஷிங்டன் சுந்தர் 51 ரன்கள் அடித்து, கவுரவமான இலக்கை நிர்ணயம் செய்ய காரணமாக இருந்தார்.

இந்தப்போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும் என்ற நிலையில், இந்திய அணி பந்துவீச தொடங்கியது. தொடக்க வீரர்களான ஆலன், கான்வே சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். சிறப்பாக ஆடிய ஆலன் 57 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார்.

நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 18 ஓவர்களில் 104 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால், ஆட்டம் நிறுத்தப்பட்டது.

டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இந்திய அணியை விட நியூசிலாந்து அணி 50 ரன்களுக்கு மேலாக முன்னிலையில் உள்ளது. இருப்பினும், 20 ஓவர்களுக்கு மேல் விளையாடி இருந்தால் மட்டுமே, வெற்றி, தோல்வியை கணக்கிட முடியும். ஆனால், நியூசிலாந்து அணி 18 ஓவர்கள் மட்டுமே விளையாடியிருந்தது. இதனால், 2 ஓவர்களில் அந்த அணிக்கு வெற்றி கையைவிட்டு போனது.

இருப்பினும், முதல் போட்டியில் வெற்றி பெற்றதால் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. ஏற்கனவே, மழையின் காரணமாக ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணியிடம் டி20 தொடரை நியூசிலாந்து அணி இழந்தது. ஆனால், இந்த முறை அதிர்ஷ்டம் நியூசிலாந்து பக்கம்தான்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 510

    0

    0