Paytm மூலம் பணம் பெற்ற நீதிபதியின் உதவியாளர் : ஆதாரத்துடன் சிக்கியதால் நீதிபதி போட்ட அதிரடி உத்தரவு!!

Author: Udayachandran RadhaKrishnan
1 December 2022, 8:51 pm

வழக்கறிஞர்களிடம் இருந்து பேடிஎம் மூலம் அன்பளிப்பாக பணம் பெற்றதாக நீதிபதியின் உதவியாளரை பணியிடை நீக்கம் செய்து அலாகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரபிரதேசம் அலாகாபாத் மாவட்ட மூத்த நீதிபதி ஒருவருக்கு உதவியாளராக இருக்கும் இளைஞர் ஒருவர், அங்கு வரும் வழக்கறிஞர்களிடம் ஒவ்வொரு முறை வழக்கு விசாரணைக்கு ஆஜராகும் போதும் டிப்ஸாக பணம் பெறுவதை வாடிக்கையாக வைத்திருந்தார்.

ஒரு கட்டத்தில் இந்த முறை புதிய நுட்பமாக பேடிஎம் கியூஆர் கோர்டு லேபிளை இடுப்பில் கட்டிக்கொண்டு அதன் மூலம் பணம் வசூல் செய்து வந்துள்ளார்.

இது நீதிபதியின் கவனத்துக்குச் சென்ற நிலையில் அவரை பணியிடைநீக்கம் செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

பணியிடைநீக்கம் காலத்தில் அவர் வேறு எந்த வேலை, வர்த்தகம் அல்லது தொழிலில் ஈடுபடவில்லை என்பதற்கான சான்றிதழை அளித்தால் அவருக்கு வாழ்வாதார உதவி வழங்கப்படும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Sivakarthikeyan transition from TV to big screen சீரியல் வாய்ப்புக்கு ஏங்கிய சிவகார்த்திகேயன்..NO சொன்ன சின்னத்திரை நடிகர்..!
  • Views: - 458

    0

    0