சுதந்திரம் அடைந்த போது செய்த தவறையே மீண்டும் செய்யாதீர்கள் : தேர்தல் பேரணியில் பிரதமர் மோடி பேச்சு!!
Author: Udayachandran RadhaKrishnan1 December 2022, 9:44 pm
குஜராத் மக்கள் சுதந்திரத்திற்கு பின்னர் செய்த தவறை மீண்டும் செய்யாமல் பாஜகவை மீண்டும் ஆட்சியில் அமர செய்ய வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஆமதாபாத், குஜராத் மக்கள் சுதந்திரத்திற்கு பின்னர் செய்த தவறை மீண்டும் செய்யாமல் பாஜகவினை மாநிலத்தில் மீண்டும் ஆட்சியில் அமர செய்ய வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் சபர்கந்தா மாவட்டத்தில் தேர்தல் பேரணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி பேசியதாவது: நாடு 100வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும்போது வலிமையான இந்தியாவை உருவாக்க குஜராத்தில் பாஜக ஆட்சியில் இருக்க வேண்டும்.
இந்த குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த 5 ஆண்டுகளுக்கு யார் ஆட்சியில் இருக்கப் போகிறார்கள் என்பதற்கான தேர்தல் மட்டும் கிடையாது.
இந்தியா 75 சுதந்திர தினத்தை நிறைவு செய்துள்ளது. 100வது சுதந்திர தினத்தைக் கொண்டாட இன்னும் 25 ஆண்டுகள் உள்ளன. இந்தத் தேர்தலில் ஆட்சி அமைப்பது என்பது அடுத்த 25 ஆண்டுகளுக்கான கட்டமைப்பை உருவாக்குவதற்கான தேர்தல்.
சர்தார் படேல் முதல் பிரதமராக இருந்திருந்தால் நாடு வேறு ஒரு திசையில் பயணித்திருக்கும் என அனைவரும் கூறுகின்றனர். நாங்கள் முன்பே இருந்தவர்கள் செய்த தவறை திருத்தும் முயற்சியை ஏற்கனவே தொடங்கி விட்டோம். அதற்கான கடின முயற்சியில் இறங்கியுள்ளோம். இந்தியா சுதந்திரம் அடைந்த போது செய்த அதே தவறை நாங்கள் செய்ய முடியாது என்றார்.