ராவல்பிண்டி டெஸ்டில் ரன்மழை… பாகிஸ்தான் அணியில் 3 வீரர்கள் சதம்.. ஆதிக்கம் செலுத்த துடிக்கும் இங்கிலாந்து..!!

Author: Babu Lakshmanan
3 December 2022, 6:21 pm

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி 1ம் தேதி தொடங்கியது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதல் நாள் பேட்டிங், வரலாற்று சாதனை படைக்கும் வகையில் இருந்தது.

முதல் நாளிலேயே க்ரவுலி (122), டக்கெட் (107), போப் (108), ப்ரூக்ஸ் (153) ஆகியோர் சதமடித்து அசத்தினர். இதனால், அந்த அணி முதல் இன்னிங்சில் 657 ரன்கள் சேர்த்தது. இதைத் தொடர்ந்து, 2வது நாளில் ஆட்டத்தை தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்க வீரர்கள், இமாம் உல் அக், அப்துல்லா சஃபிக் சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். 2வது நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் விக்கெட் இழப்பின்றி 187 ரன்களை சேர்த்திருந்தது.

இந்த நிலையில், 3வது ஆட்டம் தொடங்கியதும் அப்துல்லா சஃபிக் (114), இமாம் உல் அக் (121) சதமடித்து ஆட்டமிழந்தனர். இதைத் தொடர்ந்து, அசார் அலி (27), சவுத் ஷகில் (37) ஆட்டமிழந்தாலும், நிதானமாக ஆடி கேப்டன் பாபர் ஆசம் (136) சதமடித்து ஆட்டமிழந்தார்.

ரிஸ்வான் (29), நஷீம் (15) என ஆகியோர் விக்கெட்டை இழந்த நிலையில், 3வது நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 499 ரன்கள் எடுத்துள்ளது.

  • sai abhyankkar is the music director for allu arjun atlee project அட்லீ-அல்லு அர்ஜுன் படத்துக்கு இவர்தான் மியூசிக்கா? பிளாஸ்ட்டா இருக்கே!