டாக்சியில் பயணம் செய்த பெண்ணுக்கு ‘டார்ச்சர்’ : காரை லாக் செய்து ஆபாச வர்ணனை.. சிக்கிய RED CALL TAXI ஓட்டுநர்!!
Author: Udayachandran RadhaKrishnan3 December 2022, 9:51 pm
திருப்பூர் ராயபுரம் பகுதியை சேர்ந்த 29 வயது மதிக்கதக்க பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், அப்பெண் அழகு கலை பயிற்சி நிலையத்தில் படித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை கல்லூரி செல்வதற்க்காக ரெட் டாக்சி அலுவலகத்திற்க்கு அழைத்து டாக்சி புக் செய்த நிலையில், சிறிது நேரத்தில் வீட்டிற்க்கு ரெட் டாக்சி வந்துள்ளது.
டாக்சியை ஓட்டுனர் ரஞ்சித்குமார் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இதனிடையே டாக்சி சிறிது தூரம் சென்ற நிலையில் அப்பெண்ணிடம் பேச்சு கொடுத்த ஓட்டுனர் ரஞ்சித்குமார் நீங்கள் அழகாக இருப்பதாகவும், எப்போதும் இதே போல் உடையே அணியுங்கள் , அப்போது தான் உங்கள .அழகு மேலும் எடுத்துகாட்டும் என ஆபாசமாக பேசியுள்ளார்.
இதனிடையே பயிற்ச்சி நிலையம் வந்த நிலையில் காரைவிட்டு இறங்க முடியாதபடி காரின் கதவுகளை லாக் செய்து , மொபைல் நம்பரை கொடுத்தால் தான் கதவை திறந்துவிடுவேன் என்று கூறியுள்ளான்.
இதனையடுத்து சுதாரித்து கொண்ட அப்பெண் வேறு வழியின்றி தனது கணவரின் தொலைபேசி எண்ணை கொடுத்துவிட்டு காரைவிட்டு இறங்கி பயிற்சி நிலையம் சென்றுள்ளார்.
இதனையடுத்து சம்பவம் குறித்து தனது கணவருக்கு தெரிவித்துவிட்டு திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்த நிலையில், போலீசார் ரஞ்சித்குமாரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரிக்கையில், ரஞ்சித்குமார் குற்றத்தை ஒப்பு கொண்டதை தொடர்ந்து போலீசார் ரஞ்சித்குமார் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர், மேலும் அவரின் காரை பறிமுதல் செய்தனர்