என்ன சொல்றீங்க… மஞ்சள் பயன்படுத்தினால் முகப்பரு வருமா…???
Author: Hemalatha Ramkumar4 December 2022, 2:43 pm
பழங்காலத்தில் இருந்தே பெண்கள் முகத்திற்கு மஞ்சள் பூசுவது வழக்கம். மஞ்சள் பூசுவது ஆரோக்கியமானது மற்றும் தோல் சார்ந்த பிரச்சினைகளில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் பெண்கள் மஞ்சள் பூசுவதையே மறந்து விட்டனர். பல விதமான அழகு சாதன பொருட்கள் மற்றும் பியூட்டி பார்லர் மூலம் தங்கள் அழகை மேம்படுத்துவதை விரும்புகின்றனர்.
மிகச் சிலர் செயற்கை மஞ்சள் தூளை கடைகளில் வாங்கி பயன்படுத்துகின்றனர். இது பல விதமான தோல் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. செயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படும் மஞ்சளை பயன்படுத்துவதால் முகப்பரு போன்ற பல்வேறு விதமான சரும சிக்கல்கள் ஏற்படுகிறது.
எனவே நீங்கள் சருமத்திற்கு மஞ்சள் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தால் முடிந்த வரை மஞ்சள் கிழங்கு வாங்கி, அதனை வெயிலில் உலர்த்தி மெஷினில் கொடுத்து அரைத்து பின்னர் பயன்படுத்துங்கள். இது உங்கள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
ஒரு வேலை உங்களுக்கு மஞ்சள் பயன்படுத்தி முகப்பரு வந்துவிட்டால், அதனை எக்காரணம் கொண்டும் அழுத்த வேண்டாம். மேலும் ஒரு சிலருக்கு முகப்பருவை கிள்ளும் பழக்கம் உண்டு. அப்படி செய்யக்கூடாது. கொழுப்பு நிறைந்த உணவுகள், ஐஸ்கிரீம், சாக்லேட்டுகள், கேக் போன்றவற்றை சாப்பிடுவது முகப்பருவை அதிகரிக்கும்.
ஆகவே முகப்பரு வராமல் தடுக்க முடிந்த வரை பச்சை இலை காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள், தானியங்கள் போன்ற ஆரோக்கியமான உணவுகளை அடிக்கடி உங்கள் டையட்டில் சேர்க்கவும். உடலை நீறேற்றமாக வைக்க ஒரு நாளைக்கு எட்டு டம்ளர் தண்ணீர் குடிக்கவும். போதுமான அளவு தூங்குவதும் அவசியம்.