நைட்டு முழுக்க அப்படி பண்ணுனீங்களா-னு கேட்டாரு.. மனம் விட்டு பேசிய VJ ரம்யா.. வைரல் வீடியோ..!
Author: Vignesh5 December 2022, 2:03 pm
விஜய் டிவியில் இருந்து தற்போது வெள்ளித்திரைக்கு வரும் நடிகைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. முன்பெல்லாம் பெரியதிரை நடித்தவர்கள் தான் திரைப்படம் நடிக்க ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் தற்போது சின்னத்திரை தொகுப்பாளிகள் கூட நேரடியாக வெள்ளித்திரைக்கு தாவி விடுகிறார்கள்.
விஜய் டிவி விஜேக்களை அடித்து கொள்ளவே முடியாது. சிவகார்த்திகேயன், மாகாபாவில் தொடங்கி, தற்போது ரக்ஷன், ஜாக்குலின், டிடி என பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.அந்த வகையில் தற்போது விஜே ரம்யாவும் இணைத்துள்ளார். ஏற்கனவே சில படங்களில் துணை நடிகையாக நடித்துள்ள ரம்யா தற்போது கதாநாயகியாக மாறியுள்ளார்.
இவர் தனது கணவரை விவாகரத்து செய்து அம்மா அப்பா உடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், அண்மையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில், நான் படிக்கும் வயதில் ஷூட்டிங் சென்ற போது மிகுந்த களைப்பாக இருப்பேன், இரவு முழுவதும் படித்துவிட்டு சில நேரம் ஷூட்டிங் செல்வேன். உடனே நிகழ்ச்சி கேமராமேன் என்னை பார்த்து கண்ணு சிவப்பா இருக்கு சரக்கு அடிச்சியானு கேட்டாரு, எனக்கு அங்கேயே கஷ்டமா இருக்கும் என கவலையாக கூறியுள்ளார்.