கேடுகெட்ட பிறவிகள்.. நெறியாளரை வைத்து பாஜக பெண்களை இழிவாக பேசுவதா..? வேலூர் இப்ராஹிம் காட்டம்!!

Author: Babu Lakshmanan
5 December 2022, 4:51 pm
Quick Share

திருச்சி ; திமுக சிறுபான்மையினருக்கான எந்த நலத்திட்டத்தையும் இதுவரை செய்யவில்லை என்று பாஜக மாநில சிறுபான்மையினர் பிரிவு மாநில தலைவர் வேலுார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

மாவட்ட பாரதி ஜனதா கட்சியின் சிறுபான்மையினர் பிரிவின் ஆய்வு கூட்டம் திருச்சியில் மாநில மகளிர் அணி தலைவி டெய்சி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறுபான்மையினர் பிரிவின் மாநில தலைவர் வேலூர் இப்ராஹிம் மற்றும் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சிறுபான்மையினர் பிரிவின் மாநிலத் தலைவர் வேலூர் இப்ராஹிம் கூறியதாவது :- இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் சிறுபான்மையினர் மக்களுக்கு பாரதிய ஜனதா கட்சி என்ன செய்துள்ளது என்ன திட்டங்களை கொண்டு வந்துள்ளது என்பது குறித்து இங்கு ஆலோசிக்கப்பட்டது.

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் இரட்டை இலக்கத்தில் வேட்பாளர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பி மோடி கரத்தை பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தமிழக முழுவதும் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஒழுக்கக் கேடான செயல்கள் மது போதையில் தள்ளாடுகிற நிலை, இந்த திமுக ஆட்சியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

திருச்சியில் பப்பு அமைப்பது தவறானது. அதனை எதிர்த்த பிஜேபியினரை இரும்புகரத்தால் காவல்துறையினை கொண்டு அடக்குவது கேவலமான செயல். ஸ்டாலின் சொன்ன வாக்குறுதிக்கு மாற்றமாக செயல்படுகிறார். ஆட்சிக்கு வந்தால் மது ஒழிக்கப்படும் என ஸ்டாலினும், கனிமொழியும் கூறினார்.

டிசம்பர் 6ஆம் தேதி இஸ்லாமிய அடிப்படை பயங்கரவாதிகள் மற்றும் திருமாவளவன், வேல்முருகன், ஆகியோர் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தை முற்றுகையிட போவதாக தெரிவித்துள்ளனர். இஸ்லாமியரும், கிறிஸ்தவ இணைந்து ராணுவமாக அதனை முறியடிப்போம்.

ஒரு தனியார் தொலைக்காட்சி ஒரு நெறியாளரை வைத்துக்கொண்டு பிஜேபியின் பெண்களை இழிவுபடுத்தக் கூடிய வேலையை செய்கின்றனர். இது கண்டிக்கத்தக்கது. இது தொலைக்காட்சியினர் வரைமுறைப்படுத்த வேண்டும்.

பொது சிவில் சட்டம் வருகின்றது என்றவுடன் இஸ்லாமியர்களை அச்சுறுத்தும் விதமாக திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர் கூறி வருகின்றனர். நாங்கள் இது தொடர்பான விவாதிக்க தயாராக இருக்கிறோம். அதற்கு தயாரா..?

இந்துத்துவா சித்தாந்தத்தை பேசுகிறவர்களுக்கு எதிராக பயங்கரவாத சக்திகள் தலைநிமிர்ந்து இருக்கிறார்கள். எனவே, ஸ்டாலின் எங்களை எதிரிக்கட்சியாக பார்க்காமல் எதிர்க்கட்சியாக பார்த்து ஜனநாயகத்தின் அடிப்படைகளில் எங்களது உரிமை தடுக்க வேண்டாம் என்று கோரிக்கை வைக்கிறோம்.

சிறுபான்மை மாணவர்களுக்காக உதவித்தொகையை ரத்து செய்ததாக திமுகவும், அதன் கூட்டணி கட்சியினரும், கோபால்சாமியும் தவறாக கூறி வருகின்றனர். 1ம்வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை கட்டாயம் கல்வி திட்டம் வந்ததால் மானியம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. 9வது, 10வது படித்துவிட்டு கல்லூரி படித்துவிட்டு வெளிநாடு செல்வதற்கு ஆன தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. சிறுபான்மை பிரிவினர்களுக்காக நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சியில் சிறுபான்மையினர் பிரிவுக்காக எந்த வித நன்மையும் செய்யவில்லை, என தெரிவித்தார்.

  • sivakarthikeyan-updatenews360அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் – செம லவ்வா இருக்கே – வீடியோ!
  • Views: - 679

    0

    0