கோவையில் பிரபல நாட்டியப் பள்ளிக்குள் புகுந்து சிலைகள் திருட்டு : போலீசார் விசாரணை!!
Author: Udayachandran RadhaKrishnan6 December 2022, 12:49 pm
கோவை சுந்தராபுரம் செங்கப்ப கோனார் வீதியில் தனியார் மருத்துவமனைக்கு பின்புறம் பரதநாட்டிய பயிற்சியாளர் முரளி ( 50) என்பவருக்கு சொந்தமான ஸ்ரீ நாட்டியப்பள்ளி 20 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.
நேற்று முன்தினம் இரவு முரளி பரதநாட்டிய பயிற்சியை முடித்துவிட்டு நாட்டியப் பள்ளியை பூட்டி விட்டு சென்றார். பின்னர் நேற்று காலை வந்து பார்க்கும்போது கதவு உடைக்கப்பட்டு இருந்தது.
உடனே உள்ளே சென்று பார்க்கும் போது சிலைகள் திருட்டு போயிருந்தது தெரிய வந்தது. நடராஜர் சிலை, சிவகாமி அம்மன் சிலை, நந்தி சிலை, விநாயகர் சிலை, யானை சிலை, இரண்டு குத்து விளக்குகள் ஆகியவை திருடப்பட்டிருந்தது.
இதுகுறித்து குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.