லாரி மீது மினி வேன் மோதிய விபத்தில் 6 பேர் பலி… மதுராந்தகம் அருகே அதிகாலையில் நிகழ்ந்த கோர விபத்து!!

Author: Babu Lakshmanan
7 December 2022, 8:33 am

மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் மீது டாடா ஏசி வாகனம் மோதியதில் 6 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த ஜானகிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த லாரி, சாலையின் ஒரு ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

அப்போது, பின்னால் வந்த டாட்டா ஏஸ் வாகனம் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில், டாடா ஏஸ் வாகனத்தில் பயணித்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடல்களை மீட்டு, விபத்தில் சிக்கியவர்களின் விபரம் குறித்து சேகரித்தனர். அதில், சென்னை பொழிச்சலூர் பல்லாவரம் பகுதி சேர்ந்த சந்திரசேகர் (70), சசிகுமார் (35), தாமோதரன் (28), ஏழுமலை (65), கோகுல் (33), சேகர் (55) ஆகிய ஆறு பேர் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.

மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலையில் நடந்த கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…