கமல்ஹாசனால் எதிர்காலத்தை தொலைத்த நடிகைகள்… இது லிஸ்டுலயே இல்லையேப்பா : பயில்வான் வெளியிட்ட பட்டியல்!!
Author: Udayachandran RadhaKrishnan8 December 2022, 5:14 pm
தமிழ் சினிமாவில் 80களில் இருந்து நடித்து உலக நாயகன் என்ற பெயரோடு உச்சத்தில் இருப்பவர் நடிகர் கமல் ஹாசன். அவர் படம் என்றால் மிகப்பெரியளவில் நடிப்பு வெளிப்படும் என்பதற்காக அவருடன் நடிக்க பலர் ஆசைப்படுவார்கள்.
ஆனால் ஒருசில நடிகைகளோ அவரின் முத்தக்காட்சி, நெருக்கமான காட்சிகளால் அவரா? வேண்டவே வேண்டாம் என்று ஒதுங்கக்கூடியவர்களும் இருக்கிறார்கள்.
அதற்கு காரணம் கமல் ஹாசன் படம் என்றால் அவையெல்லாம் இருக்க வைத்துவிடுவார். அதேபோல் கமல் ஹாசன் படத்தில் நடிக்க கூடாது என்ற உறுதியில் சில நடிகைகள்இருந்து வந்தார்.
அப்படி கமல் ஹாசன் படத்தில் நடித்து மார்க்கெட்டை இழந்த நடிகைகளின் லிஸ்ட்டை சமீபத்தில் பயில்வான் ரங்கநாதன் வெளியிட்டிருக்கிறார்.
கமல் ஹாசனின் படங்களை பெண்கள் பார்க்க மறுத்தார்கள் அதேபோல் ரஜினியின் மார்க்கெட் எகிற காரணம் பெண்கள் அவரது படத்தை பார்த்து வந்தனர்.
ஆனால் கமல் ஹாசன் மார்க்கெட் இறங்க காரணம் பெண்கள் பார்க்க மறுத்து தயங்கினார்கள். எத்தனை லட்சம் கொடுத்தாலும் கமல் ஹாசனுடன் நடிக்க மாட்டேன் என்று உறுதியாக இருந்து வந்தார்.
அதேபோல் கிளாமர் ஆடைகளை அணிந்து நடிக்காத நடிகை நதியா. அவரை தொடர்ந்து நடிகை சுபலட்சுமியும் கமல் ஹாசனுடன் நடிக்க மறுத்துள்ளார்.
நடிகை சிம்ரன் கமலுடன் நெருக்கமாக நடித்து லிவ்விங் டு கெதர் வாழ்க்கையில் இருந்தனர். அப்படி ஒரு படத்தில் நடிக்கும் போது சிம்ரன் பேமெண்ட்டை கமல் ஹாசனே வாங்கியிருக்கிறாராம்.
இதன்பின் கமல் ஹாசன் பற்றி நன்றாக கூறியதே கிடையாது. தன் பாதுக்காப்புக்காக ராஜுசுந்தரத்தை காதலித்தார் சிம்ரன்.
அதன்பின் விருமாண்டி படத்தின் போதும் அதன்பின்னும் கமல் கொடுத்த டார்ச்சரால் அமெரிக்காவில் திருமணம் செய்து செட்டிலாகிவிட்டார் நடிகை அபிராமி.
அவருக்கு பின், நடிகை கெளதமியின் உயிரை காப்பாற்றிய வரும் கமல் தான். வாழவைத்ததும் வெறுப்பை கொட்டியதும் கமல் ஹாசன் தான் காரணம்.
அதன்பின் மகளுக்காக கெளதமி கமல் ஹாசனைவிட்டு விலகுவதாக கூறியிருந்தார். இதனால் தான் கெளதமி பிஜேபி உறுப்பினராகினார்.
கமல் ஹாசனால் தான் இன்னும் ஸ்ருதி ஹாசனுக்கும் அக்ஷரா ஹாசனுக்கு திருமணமாகமல் இருக்கிறார்கள் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
மேலும் என்னுடைய இரு வாய்ப்புகளை கமல் ஹாசன் பரித்துவிட்டார். கமல் ஹாசன் நடித்த முதல் படம் பட்டாம்பூச்சி-யில் கதாநாயகியை கற்பழித்தது பற்றி கேட்ட கேள்வி தான் எனக்கும் கமலுக்கு ஏற்பட்ட பகைக்கு காரணம் என்று பயில்வான் தெரிவித்துள்ளார்.