வெள்ளக்காடாக மாறிய திருப்பதி : திரும்பும் பக்கம் எல்லாம் மழை நீர்.. குடியிருப்புகளை நீர் சூழ்ந்ததால் மக்கள் அவதி!!
Author: Udayachandran RadhaKrishnan10 December 2022, 12:55 pm
மாண்டஸ் புயல் காரணமாக விடிய விடிய திருப்பதி திருமலையில் அடைமழை பெய்ததால் பல பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.
மாண்டோஸ் புயல் காரணமாக நேற்று மதியம் துவங்கி விடிய விடிய திருப்பதி, திருமலை உட்பட திருப்பதி மாவட்டத்தின் பல்வேறு ஊர்களிலும் அடை மழை பெய்தது.
இதனால் திருப்பதி மலைக்கு சாமி கும்பிடுவதற்காக வந்திருந்த பக்தர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.
தொடர் அடை மழை காரணமாக திருப்பதியில் உள்ள பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.
இதனால் அங்கு வசிக்கும் பொது மக்களை தற்காலிக முகாம்களுக்கு அனுப்பி வைக்கும் பணியில் திருப்பதி நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
கடுமையான குளிர் காற்றுடன் கூடிய அடைமழை தற்போதும் பெய்து வருகிறது. எனவே சாமி கும்பிடுவதற்காக வந்திருக்கும் குழந்தைகள், மூத்த குடிமக்கள் ஆகியோர் அவதிபடுகின்றனர்.