பாபா வராரு Light எல்லாம் போடுங்க…வசனம் மட்டுமல்ல வெற்றி தியேட்டரில் நடந்த செயல்.. அதகளப்படுத்திய ரசிகர்கள்!! (வீடியோ)

Author: Udayachandran RadhaKrishnan
10 December 2022, 4:01 pm

ரஜினியை வைத்து அண்ணாமலை, பாட்ஷா, வீரா போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா, சூப்பர்ஸ்டாருடன் நான்காவது முறையாக இணைந்த படம் தான் பாபா.

இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்ததோடு மட்டுமின்றி, இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி தனது லோட்டஸ் இண்டர்நேஷனல் கம்பெனி மூலம் தயாரிக்கவும் செய்திருந்தார்.

இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா நடித்திருந்தார். மேலும் கவுண்டமனி, விஜயகுமார், ஷாயாஜி ஷிண்டே, ரீனா பரத்வாஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்த இப்படத்திற்கு சோட்டா கே நாயுடு ஒளிப்பதிவு செய்திருந்தார். கடந்த 2002-ம் ஆண்டு ரிலீசான போது இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இருப்பினும் ரஜினியின் மனதுக்கு நெருக்கமான படமாக பாபா இருந்து வந்தது. இதன் காரணமாக இப்படத்தை தற்போது டிஜிட்டலில் மெருகேற்றி, சில மாற்றங்களை செய்து மீண்டு ரீ-ரிலீஸ் செய்து உள்ளனர். இன்று பிரம்மாண்டமாக ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ள பாபா திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணிக் காட்சியும் திரையிடப்பட்டது.

மாண்டஸ் புயல் அச்சுறுத்தல் இருந்தாலும் அதனையெல்லாம் பொருட்படுத்தாத ரஜினி ரசிகர்கள் இன்று அதிகாலையிலேயே தியேட்டர் முன் கூடி பட்டாசு வெடித்தும், தாரை தப்பட்டை முழங்க ஆடிப்பாடியும் இப்படத்தை கொண்டாடினர்.

ஏற்கனவே ரிலீசான படமாக இருந்தாலும் புது படத்திற்கு எந்த அளவுக்கு வரவேற்பு இருக்குமோ அந்த அளவுக்கு பாபா படத்தின் ரீ-ரிலீசுக்கும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்தநிலையில் சென்னை வெற்றி திரையரங்கில் பாபா படம் ரிலீஸ் செய்யப்பட்டது. அப்போது படத்தில் ஒரு காட்சியில் கவுண்டமணி, ரஜினி திரையரங்குக்குள் செல்வது போலவும், கவுண்டமணி பாபா வராரு லைட் எல்லாம் போடு என்று சொல்லுவார்.. படத்தில் லைட் போட்டது போல, வெற்றி திரையரங்கில் லைட் போடப்பட்டது.

உடனே ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். ரஜினி கவுண்டமணியிடம் லைட்டை ஆஃப் செய்ய சொல்லுவார்.. பின்னர் அது போலவே லைட் ஆஃப் செய்யப்பட்டது. இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 850

    6

    0