முதலமைச்சரின் கான்வாயில் தொங்கியபடி பயணித்த மேயர் பிரியா… ஓடி வந்து ஏறிய சென்னை ஆணையர்.. வைரலாகும் வீடியோ!!

Author: Babu Lakshmanan
10 December 2022, 5:16 pm

முதலமைச்சர் ஸ்டாலினின் கான்வாயில் சென்னை மேயர் பிரியா தொங்கியபடி பயணித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை மக்களை அச்சுறுத்தி வந்த மாண்டஸ் புயலின் மையப்பகுதி இரவு 2.30 மணி அளவில் கரையை கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. புயல் கரையை கடந்த போது வீசிய பலத்த காற்றினால் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

எனவே, பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனிடையே, மாண்டஸ் புயல் பாதிப்பு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். கொட்டிவாக்கம், பாலவாக்கம், ஈஞ்சம்பாக்கம், பனையூர் உள்ளிட்ட இடங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வு பணிகளின் போது அமைச்சர் சேகர் பாபு, கேஎன் நேரு மற்றும் சென்னை மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ககன்சிங் பேடி உள்ளிட்டோரும் இருந்தனர்.

இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினின் கான்வாயில் சென்னை மேயர் பிரியா தொங்கியபடி பயணித்தார். அப்போது, சாலையோரம் நின்றிருந்த சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்சிங் பேடி ஓடி வந்து அந்த கான்வாயில் ஏறிக் கொண்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • Good Bad Ugly Hit of Flop குட் பேட் அக்லி படம் ஹிட்டா? இல்லையா? இன்னும் எவ்வளவு கோடி வசூல் செய்யணும்?