மத நம்பிக்கையில் திமுக தாக்குதல் நடத்தாது.. அது எங்க வேலையும் இல்ல : அமைச்சர் மனோ தங்கராஜ் கருத்து!
Author: Udayachandran RadhaKrishnan11 December 2022, 6:27 pm
மத நம்பிக்கையில் திமுக ஒரு போதும் தாக்குதல் நடத்தாது.அது எங்கள் வேலையும் அல்ல என அமைச்சர் மனோதங்கராஜ் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் உடையார் விளை பகுதியில் உள்ள தனியார் பிசியோதெரபி கல்லூரி நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் மனோதங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், மீனவர்ளுக்கு வழங்கும் சலுகை திமுக ஆட்சியில் அதிக படுத்த பட்டுள்ளது, இது குறித்து பேச ஜெயக்குமார் தகுதியற்றவர். இதற்கு கடந்த ஆட்சியில் ஏற்பட்ட கஜா, ஓகி போன்ற பேரிடரில் இவர்களின் மோசமான செயல்பாடுகளை பார்த்ததில் உலகமே சாட்சி,
நேற்று நடந்த புயல் குறித்து இன்று அவர் பேசுவது அநாகரிகமான செயல்.
தக்கலை காவல் நிலையத்தில் காவடி கட்டு நிகழ்வின் போது பாஜகவினர் மற்றும் இந்து அமைப்பினர் அனுமதி இன்றி உள்ளே புகுந்து பூஜை பரிகாரங்கள் செய்ததால் தான் எஸ் பி தடை விதித்துள்ளார்,
என் காதிற்கு தெரிய வந்ததும் நான் பாரம்பரிய நிகழ்வுக்கு உடனே அனுமதி வழங்க கேட்டு கொண்டேன், இந்த விவகாரத்தில் பாஜகவினர் இது போன்ற கேவலமான அரசியல் செய்வதை விட நம்மூரில் கூறுவது போன்று வேறு ஏதாவது செய்து பிழைக்கலாம்.
கடந்த முறை நான் எம் எல் ஏ வாக இருந்த நேரத்தில் இந்த காவடி கட்டு நிகழ்வில் பங்கேற்று உள்ளேன். மத நம்பிக்கையில் திமுக ஒரு போதும் தாக்குதல் நடத்தது. அது எங்கள் வேலையும் அல்ல என அவர் பேசினார். நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்