‘உருட்டுன உருட்டுல கந்தர்வக்கோட்ட சமஸ்தானமே ஆடிப்போச்சு பா’..! சமந்தாவுடன் அதை செய்ததாக சொன்ன VJ ரம்யாவை வச்சி செய்யும் நெட்டிசன்கள்..!

Author: Vignesh
12 December 2022, 1:00 pm

தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வரும் பல்வேறு பெண் தொகுப்பாளினிகளும் சீரியல் நடிகைகளுக்கு இணையாக ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமாக இருந்து வருகிறார்கள்.

பிரபலமான தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்து வரும் டிடி, vj ரம்யா, பாவனா போன்ற பல்வேறு பெண் தொகுப்பாளினிகள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம், விஜய் தொலைக்காட்சி மட்டுமல்லாது பல்வேறு தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த vj ரம்யா பல்வேறு கலை நிகழ்ச்சிகள், இசை வெளியீட்டு விழா என்று பல்வேறு விழாக்களில் தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார். vj ரம்யாவிற்கு என்று ஒரு தனிப்பட்ட ரசிகர் கூட்டமும் இருந்து வருகிறார்கள்.

vj ramya - updatenews360

சென்னை போட்டியில் 2014 ஆம் ஆண்டு இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார் vj ரம்யா. அதன்பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, நம்ம வீட்டு கல்யாணம், கில்லாடிகள் போன்ற பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.

தொடர்ந்து தொகுப்பாளராக பணியாற்றி வந்த vj ரம்யா கடந்த 2014 ஆம் ஆண்டு அஜித் ஜெயராமன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

samantha and ramya - updatenews360

vj ரம்யா திருமணத்திற்குப் பின்னர் இனி தொலைக்காட்சிகளில் பணியாற்ற மாட்டேன் என்று அறிவித்திருந்தார். ஆனால், திருமணம் முடிந்த ஓராண்டு காலத் திலேயே விவாகரத்து செய்துவிட்டார். 2007 ஆம் ஆண்டு தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த போதே ஜோதிகா நடிப்பில் வெளியான மொழி திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ரம்யா.

அதன் பின்னர் vj ரம்யா மங்காத்தா, ஓ காதல் கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி போன்ற பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

samantha and ramya - updatenews360

நடிகை ரம்யாயாவும் நடிகை சமந்தாவும் நெருங்கிய தோழிகள் ஆவார்கள். ரம்யா திருமணத்திற்கு கூட நடிகை சமந்தா வந்திருந்தார் அதே போல இவர்கள் இருவரும் அடிக்கடி ஊர் சுற்றுவதையும் வாடிக்கையாக வைத்து வருகின்றனர். திருப்பதிக்கு கடந்த சில காலமாக இவர்கள் அடிக்கடி சென்று வருகிறார்கள்.

இதுவரை திருப்பதி மலைக்கு சமந்தாவுடன் சேர்ந்து ரம்யா 3 முறை நடந்தே சென்று ஏறி இருக்கிறார். அதிலும் ரம்யாவும், சமந்தாவும் திருப்பதி மலைக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்து சென்ற போது எடுத்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்த ரம்யா 3 ஆயிரத்து 500 படிக்கட்டுகளை 2.5 மணி நேரத்திற்கும் குறைவாக ஏறி விட்டதாக பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ரம்யா, சமந்தாவும் நானும் திருப்பதி மலையை ஒன்றே முக்கா முதல் 2 மணி நேரத்திற்குள் ஏறி விடுவோம் என்று தெரிவித்துள்ளார்.

samantha and ramya - updatenews360

இதனை கண்ட ரசிகர்கள் பலரும் அது எப்படி 3500 படிக்கட்டுகளை 2 மணி நேரத்தில் ஏற முடியும். ஒரே உருட்டா இல்ல இருக்கு என்று விமர்ச்சித்து வருகின்றனர்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 764

    0

    0