சபாநாயகரை கொல்ல முயன்ற பிரபல ரவுடி ஓடஓட வெட்டிப் படுகொலை ; பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

Author: Babu Lakshmanan
12 December 2022, 4:46 pm

புதுக்கோட்டை ; புதுக்கோட்டை நகரப்பகுதியான பொதுக்குளம் என்ற பகுதியில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மேலகல்கண்டார்கோட்டையை சேர்ந்தவர் இளவரசன்(30). புதுச்சேரி துணை சபாநாயகரை கொல்ல முயன்ற வழக்கு உள்பட இவர் மீது பல கொலை, கொலை மிரட்டல், கொலை முயற்சி, திருட்டு வழக்குகள் உள்ளன.

இன்று காலை ஒரு வழக்கு தொடர்பாக புதுக்கோட்டை கோர்ட்டில் ஆஜராக இளவரசன் புதுக்கோட்டை வந்ததாக கூறப்படுகிறது. அப்போது, கோர்ட் அருகே வந்தபோது இன்று காலை 10 மணி அளவில் அவர் புதுக்குளம் கரை ஓரம் சென்று கொண்டிருந்தார்.

அந்த சமயம் அங்கு வந்த மர்ம கும்பல், இளசரசனை சுற்றி வளைத்து வெட்டிக்கொலை செய்தது. சிறிது நேரம் கழித்த பிறகு தான் இளவரசன் கொலை செய்யப்பட்டு கிடந்த தகவல் தெரியவந்தது. கொலையாளிகள் யார், எப்படி அங்கு வந்தார்கள் என்பது தெரியவில்லை. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு எஸ்.பி வந்திதா பாண்டே மற்றும் போலீசார் நேரில் வருகை வந்து விசாரணை நடத்தினர்.

மோப்பநாய் உதவியுடன் குற்றவாளிகளை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் புதுகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ரவுடி இளவரசன் கூட வந்த இரண்டு பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…