தமிழ் மாநில கலை மற்றும் கலாச்சார பிரிவின் சார்பில் மாபெரும் குறும்பட போட்டி..!

Author: Vignesh
12 December 2022, 9:00 pm

தமிழ் மாநில கலை மற்றும் கலாச்சார பிரிவின் சார்பில் மாபெரும்
குறும்பட போட்டி, பா. ஜ.க தலைவர் அண்ணாமலை அறிவிப்பை வெளியிட்டார்.

தமிழ் மாநில கலை மற்றும் கலாச்சார பிரிவின் சார்பில் தமிழ் தாய் விருதுகள் என்ற பெயரில் குறும்பட போட்டியை நடத்தவிருக்கிறார்கள்.

தமிழ் மொழியில் ஐந்து முதல் 15 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த குறும்படம் தமிழ்நாட்டின் கலை மற்றும் கலாச்சாரத்தை முன்னிலைப்படுத்துவதாகவும் குழந்தை பெண்களின் முன்னேற்றம் மத்திய அரசின் திட்டங்கள் மூலம் கிடைக்கும் பலன்கள் போன்றவற்றைப் பற்றி இருக்க வேண்டும்.

annamalai - updatenews360.jpg 2

மாணவர்களுக்கு சிறந்த மூன்று குறும்படங்கள் ,சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர் ,சிறந்த ஒளிப்பதிவாளர் என்ற விருதுகளும், பொது பிரிவில் சிறந்த மூன்று குறும்படங்களுக்கு விருதுகளும் வழங்கப்பட உள்ளது.

இந்த போட்டிக்கு நடுவர்களாக இயக்குனர் கே. பாக்யராஜ், இயக்குனர் யார் கண்ணன், ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

annamalai - updatenews360.jpg 2

வெற்றி பெறும் அனைவருக்கும் ரூபாய் ஒரு லட்சம் பரிசு தொகையும் வெற்றி பெற்றதற்கான சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்படும்.

போட்டியாளரகள் tamizhthaivirudhu.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். அனுமதி இலவசம். பதிவு செய்ய வேண்டிய கடைசி தேதி 30 டிசம்பர் 2022 மாலை 6 மணிக்குள்.

வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா ஜனவரி 5ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கான அறிவிப்பை பாஜக தமிழ் மாநில தலைவர் திரு அண்ணாமலை இன்று வெளியிட்டார்.

annamalai - updatenews360.jpg 2
  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…