கருணாநிதி, ஸ்டாலின் செய்யாத சாதனையை நிகழ்த்தும் உதயநிதி.. இவருக்கு பக்கத்திலா இருக்கை? சட்ட திருத்த விதிகளை மீறும் திமுக அரசு?!

Author: Udayachandran RadhaKrishnan
13 December 2022, 9:23 am

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலினை அமைச்சரவையில் சேர்க்குமாறு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்திருந்தார்.

அதற்கு ஆளுநர் நேற்றைய தினம் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து ராஜ்பவனில் உள்ள தர்பார் ஹாலில் வரும் 14ஆம் தேதி காலை 9.30 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது.

இந்த சூழலில் உதயநிதிக்கு எந்த துறை வழங்கப்பட போகிறது என்பது விவாதப் பொருளாக மாறியுள்ளது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்பு திட்ட அமலாக்கம் ஆகிய இரண்டு துறைகள் ஒப்படைக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் அமைச்சர் மெய்யநாதன் அவர்கள் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை உடன் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையும் கவனித்து வருகிறார். சிறப்பு திட்ட அமலாக்கத்துறை முதல்வர் மு.க.ஸ்டாலின் வசமுள்ளது.

இவை இரண்டும் தான் உதயநிதி ஸ்டாலின் வசமாகப் போகிறது என்று கூறப்படுகிறது. உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுப்பதன் மூலம் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் எண்ணிக்கை 35ஆக மாறவுள்ளது.

இந்திய அரசியலமைப்பின் 91வது சட்டத் திருத்தம் 2003ன் படி மத்திய, மாநில அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை மொத்தமுள்ள மக்களவை அல்லது மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 15 சதவீதத்தை தாண்டக் கூடாது என்ற உச்ச வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதுவே கடைசியாகும். இதற்கு மேல் அமைச்சர்களின் எண்ணிக்கையை கூட்ட முடியாது. வேண்டுமெனில் அமைச்சரவையில் மாற்றம் மட்டுமே செய்யலாம். விரிவாக்கம் செய்ய முடியாது.

இந்நிலையில் தலைமை செயலகத்தின் முதன்மை கட்டிடத்தில் இரண்டாவது தளத்தில் தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் அறைக்கு அருகில் உதயநிதி ஸ்டாலினுக்கான அமைச்சர் அறை தயாராகி வருகிறது.

திமுகவில் கருணாநிதி, ஸ்டாலினுக்கு கிடைக்காத பெருமை உதயநிதிக்கு கிடைக்கப் போகிறது. அதாவது, முதல்முறை எம்.எல்.ஏவாக பதவியேற்று 10 ஆண்டுகள் கழித்து தான் கருணாநிதி அமைச்சர் ஆனார்.

இதேபோல் ஸ்டாலின் அமைச்சராக 17 ஆண்டுகள் ஆனது. இவர்களை ஓவர்டேக் செய்து சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏவான 19 மாதங்களில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகிறார்.

  • Vijay Deverakonda and Rashmika Mandanna relationship ராஷ்மிகா போட்ட கண்டிஷன்..திருமணத்தை உதறிய விஜய் தேவரகொண்டா..!
  • Views: - 423

    0

    0