பாதியாக உடல் எடையை குறைத்து ஸ்மார்ட்டாக மாறிய விக்ரம் பட நடிகர்… எடையை குறைக்க இது தான் காரணமாம்?- வெளிவந்த புது தகவல்..!
Author: Vignesh13 December 2022, 11:30 am
தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி ஹீரோவாகவும், வில்லனாகவும் கலக்கி வருபவர்.
அண்மையில் வெளிவந்த திரைப்படம் டிஎஸ்பி. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் விஜய் சேதுபதி நடிப்பில் தோல்வியை தழுவியுள்ளது.
இந்த ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த விக்ரம், காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்கள் வெற்றிகரமாக அமைந்துள்ளது. மேலும், தற்போது ஜவான், காந்தி டாக்ஸ், விடுதலை உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இந்நிலையில், விஜய் சேதுபதியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம ஸ்மார்ட்டான லுக்கில் மிரர் செல்ஃபி எடுத்து அதன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், உடல் எடையை குறைத்து ஸ்லிமாகவும், ஸ்மார்ட்டாகவும் மாறிவிட்டார் என கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..